06-02-2005, 10:27 AM
vennila Wrote:மனிதம் எங்கே
(படித்ததை பகிர்கிறேன்)
பற்றியெங்கும் எரிகிறது பயங்கரத்தீ
பார்த்திருப்பார் பலரிங்கே பரிதவிப்பார்
சுற்றியெங்கும் உயிர்கொண்டு ஓடியோடி
சுகந்தேடும் சிலநூறு சுகந்தம் நாடும்
இற்றழியும் இளமைநலம் இருட்டினூடு
இதயமிலார் போலோடும் ஆளும் நாளும்
கற்றவர்கள் கருத்துரிமை காக்கும் மேலோர்
கனிவுடைய மனிதமெங்கே தேடுகிறேன்
போரென்றால் வளர்துன்பம் ஆக்கமில்லை
போற்றுமறம் நிலைக்காது தொலைந்து போகும்
சீரெல்லாம் சிதைந்தழியும் விடிவு ஏது?
செய்கருமம் உறுதிகெடும் இன்பம் சாகும்
பாரெங்கும் அகதிகளாய் மக்கள் வெள்ளம்
பதைபதைத்து உயிர்பிடித்து ஊர்ந்து வாழும்
ஆரிவற்றை உடன்நிறுத்தி அமைதிகாணும்
ஆற்றலுடை மனிதமெங்கே தேடுகிறேன்
வெடியதிர விண்ணுயர்ந்த மண்டபங்கள்
வீழ்ந்துசரிந் துருமாறி இடிந்துமாயும்
நொடியொன்றில் மந்திரமோ உயிருடலம்
நூறுபல துகளாகிச் சிதைந்துபோகும்
ஒடிந்தினிய உயர்வழகு உணர்வு செம்மை
ஒழிந்தகலத் திகில்மூடும் உள்ளம் சோரும்
மடிந்ததுவோ மானிடத்தின் கருணையன்பு
மனிதமெங்கே மனிதமெங்கே தேடுகிறேன்
குருவிகளைப் போல மனிதம் தேடும் பலர் இருக்காங்க போல...! அவர்களுக்காக வேணும் அதர்மம் அழித்து மனிதம் வாழட்டும்...!
நன்றி தங்கையே...படித்ததைப் பகிர்ந்ததற்கு...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

