Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோதிட பைத்தியங்களே...
#1
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் நண்பரைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர் ஜோதிட நிகழ்ச்சிகளை தயாரித்து அளிப்பவர். நானும் அன்று அவருடன் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தேன். பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டேன்.

அன்று 25 நாட்களுக்கு தேவையான ராசிபலன்களை எந்த விதக் குறிப்புமின்றி மளமளவென்று பிரபல ஜோதிடர் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க, அது கேமிராவில் பதிவு செய்ய பட்டது.

அந்த நிகழ்ச்சி பற்றி குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் நண்பர், தன் குறிப்புகளைப் பார்த்து ஜோதிடரிடம், "சார், நீங்கள் சிம்மராசிக்கும், மேஷராசிக்கும் ஒரே நிறத்தை தொடர்ந்து மூன்று நாள் கூறி விட்டீர்கள். சரியா?' என்றார்.

அலட்டிக் கொள்ளாமல், "அப்படியா? மறந்து போய் சொல்லிவிட்டேன், வேறு ராசி எண்கள், நிறத்தைக் கூறுகிறேன். திரும்ப படம் பிடித்துக் கொள்ளுங்கள்' என்றார் ஜோதிடர். அதைக் கேட்டு சிலையாகி விட்டேன்.

அரைகுறையாக ஜோதிடர்கள் சொல்லும் ராசி பலன் நிகழ்ச்சியை நம்பி தினமும் அதற்கேற்ப நடந்து கொள்ளும் ஜோதிட பைத்தியங்கள் இது தெரிந்து திருந்த வேண்டும்.

—எஸ்.சுப்ரமணியன்,
குரோம்பேட்டை.


நன்றி: தினமலர்
Reply


Messages In This Thread
ஜோதிட பைத்தியங்களே... - by சாமி - 09-25-2003, 08:06 PM
[No subject] - by sOliyAn - 09-25-2003, 09:33 PM
[No subject] - by tamilchellam - 09-26-2003, 06:21 AM
[No subject] - by veera - 09-26-2003, 12:40 PM
[No subject] - by shanmuhi - 09-26-2003, 01:11 PM
[No subject] - by ganesh - 10-02-2003, 03:05 PM
[No subject] - by sOliyAn - 10-02-2003, 03:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)