09-25-2003, 07:58 PM
வருமா, வருமா என்று ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் ஒரு வழியாக வந்துவிட்டது. ஐந்து கல்லுõரி மாணவர்கள் கொஞ்சம்கூட கவலையின்றி சுற்றித் திரிகின்றனர். இவர்களின் கேலி, கிண்டல், சீண்டல், அரட்டை அனைத்தும் கொஞ்சம் கூடுதல் என்றாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. போதாக்கறைக்க இவர்களுடன் விவேக் இருக்கிறார். சொல்ல வேண்டுமா? இடைவேளை வரை அரட்டைகளிலேயே அரங்கம் அதிர்கிறது. இவர்களில் ஒரவன் துணிந்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள, குருவித் தலையில் பனங்காயாக பாரம் விழுகிறது. இந்த பாரத்திலிருந்து பாய்கள் எப்படி மீள்கின்றனர் என்பது தான் பாய்ஸ். இந்த ஐந்து பையன்களை எங்கிருந்து தான் ஷங்கர் பிடித்தார் என்று தெரியவில்லை. ஐந்தும் ஐந்து ரகம். அதிலிலும் அந்தக் குண்டுப் பையன், நண்பர்களுக்காக உயிரையே விடும் சுருட்டைத்தலையன், பெண்களைக் கண்டாலே கிடார் வாசிககும் மற்றொருவன் இப்படி அனைவரும் அசத்துகின்றனர்.
குறிப்பாக பணம் இல்லாமல் குவார்ட்டர் வாங்கி ஐந்து பேரும் ஐந்து கிளாசில் ஊற்ற அதற்கு ஒருவன் டேய் ஆளுக்கு ஒரு மூடி அளவுதான் வருகிறது என்ற கவலையுடன் கூற, அதற்கு இன்னொருவன் விவேக்கை மடக்கி அவரது பாட்டிலை காலிசெய்வது சரியான காமெடி. முதலில் மோதலில் ஆரம்பித்த இவர்களின் காதல் கடைசியில் வீட்டை விட்டு வெளியே ஓடிவரும் அளவுக்கு ஆகி, விவேக் அறிவுரையில் இவர்களே பெரிய இசைக் குழுவாக மாறுவது அருமை. ஒரே ஒரு காட்சியில் வரும் புவனேஸ்வரி அந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இவரைத் தவிர வேறு யாரும் இந்தப்பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது.
ஷங்கரின் தனித் திறமையால் படம் முழுக்க பிரமாண்டம். பாடல்களோ அருமை. பல தொழில்நுட்ப ஹைலைட்கள் நிறைய உள்ளன இப்படத்தில்.
ரஹ்மானின் இசையில் ஆறு பாடல்களும் அற்புதம். அதிலும் பூம்... பூம்... மாரோ... மாரோ... பாடல்கள் ஹாலிவுட் தரம். ஒளிப்பதிவு: ரவி.கே.சந்திரன். இப்படியும் முடியுமா போன்ற காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளனர். வசனம்: சுஜாதா. கொஞ்சம் நாசுக்காக எழுதி இருக்கலாம். நடம்:ராஜு சுந்தரம். கலக்கி உள்ளார்.
கதை, திரைக்கதை, இயக்கம்: ஷங்கர். இவர் இளைஞர்களை கவர இயக்கியுள்ளார் பாய்ஸ்.
நன்றி: தினமலர்