09-25-2003, 07:50 PM
இணையத்தில் நீங்கள் உலா வரும்போது சில தளங்களை அமைத்தவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் புகுந்து அதில் உள்ள தகவல்களைத் திருடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. நான் என் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பில் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். அது எந்த அளவிற்கு பாதுகாப்பு என்பதை அறிய கீழ்க்காணும் இணைய தளத்திற்குச் செல்லவும். http://www.staysafeonline.info. இதில் Self Test, என்ற பகுதியில் சென்றால் எந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரை இணைய ஊடுருவலிலிருந்து பாதுகாப்பாக வைத்தி ருக்கிறீர்கள் என்று தெரிய வரும். பின் அந்த தளத்திலேயே Security tips section என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். இதில் தரப்பட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகளையும் படியுங்கள். நீங்கள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையோ அவை அனைத்தையும் மேற்கொள்ளுங்கள்.
நன்றி: தினமலர்
நன்றி: தினமலர்

