Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா புலிகளுடன் கைகோர்க்குமா?..........
#5
குத்தூசி Wrote:தற்போதைய இலங்கை (புலிகள்)தொடர்பான கொள்கையில் நெகிழ்வு போக்கு காணப்படுவதுபோல தென்படுகிறது. அண்மையில் யுனிசெவ் அறிக்கைகள் எல்லாம் சற்று நெகிழ்வுப் போக்கை காண்பிக்கின்றன. வான்புலிகள் விடயத்தை இலங்கை வெளிநாடுகளில் ஊதிபெரிதாக்கமுயன்றும் இந்திய தவிர்ந்த ஏணையநாடுகள் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இவையெல்லாம் அமெரிக்கி விடுதலைப்புலிகளுடன் கைசேர்ப்பதற்குரிய அறிகுறிகளா?( ஜோர்ஜ் புஸ் பொதுக்கட்டமைப்புக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.) இவையெல்லாம் தமிழர் தரப்புக்கு நன்மை பயக்குமா? உங்கள் கருத்துக்களை வையுங்களேன் பார்க்கலாம்.

யாழ் களத்தில் எழுதுபவர்கள் அமெரிக்க எதிரிகள் என்பதற்கு மேற்படி கருத்துக்கான பதில்கள் ஆதாரம்.

killya Wrote:அமெரிக்கா இல்லை எந்த ........ வந்தாலும் எங்கள் தலைவரிடம் வாய்க்காது

sinnappu Wrote:தம்பீ உந்த தஞ்சாவூர் திருவாரூர் விளையாட்டெல்லாம் எல்லாம் முந்தி இப்ப நல்லா படிச்சிட்டம்

Nitharsan Wrote:ஆகா... அமெரிக்கா வந்து அரசாங்கம் நடாத்த தமிழீழமென்ன ஆப்பகானிஸ்தானே?உதவி செய்வானே இல்லையே நிச்சயம் உபத்திரம் தருவான்

விடுதலைப்புலிகள் எந்த காலத்திலும் தம்மை அமெரிக்க எதிரிகளாகவோ அல்லது அமெரிக்க எதிரிகளுடனோ தம்மை அடையாளம் காட்டிக் கொண்டதில்லை.

அமெரிக்கா முதலீட்டு வணிகத்தால் வாழும் நாடு. தமது தயாரிப்புகளை, ஆயுதங்கள் உட்பட, விற்று வாழும் நாடு. ஆகவே சிறிலங்காவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் தமது வணிக நிறுவனங்கள் விற்பனை செய்வது பற்றி பெரிதும் கட்டுப்பாடுகளை செய்ததில்லை.

இவ்வாறான வணிகங்களை தமிழர் எதிர்ப்பு என்று பார்ப்பது முட்டாள்தனமானது. அமெரிக்கா தடை விதித்த போது விடுதலைபபுலிகள் அமைப்பு அமெரிக்காவை எதிரி என பிரகடனப்படுத்தவில்லை. மாறாக முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் Ramsay Clark தலைமையில் அந்த தடைக்கு எதிராக வழக்கு போட்டு ஓரளவு வெற்றியும் கண்டிருந்தது. விடுதலைப்புலிகளின் சட்ட ஆலோசகர் ருத்திரகுமாரன் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் அமெரிக்க குடிமகனாவார்.

மாறாக இந்தியாவை எடுத்து கொண்டால் ஆரம்பம் முதலே அது ஈழத்தமிழர்களை தனது நலனுக்காக பயன்படுத்தி பின் கைவிட திட்டமிட்டு இயங்கிய நாடு. கொம்யூனிச சீனாவும் ரஷ்யாவும் சிறிலங்காவிற்கு மட்டும் உதவி தளம் அமைத்து கொடுத்த நாடுகள்.

புதிதாக உருவான நாடுகளில் அமெரிக்க ஆதரவால் பணக்கார நாடாக மாறிய நாடுகளில் சிங்கப்பூர் முக்கியமானது. சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிநாடானது. அப்போது அது இலங்கையிலும் பார்க்க வறிய நாடு. இதே போல சீனாவிலிருந்து பிரிவினை கோரி தனிநாடாக வாழும் தாய்வான் ஐக்கிய நாடுகள் சபையால் கூட ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால் அமெரிக்க ஆதரவால் இன்று செல்வந்த நாடாக இருக்கிறது. தமிழீழ மக்களோ அமெரிக்க எதிர்ப்பு போக்கை காட்டுகின்றனர். இந்த அணுகுமுறையுடன் யாருக்கு எதை விற்று செல்வத்தை ஈட்டி தமிழீழம் முன்னேறப்போகிறது? அமெரிக்க எதிர்ப்பு கியூபா அமெரிக்க உல்லாச பயணிகளுக்கு விற்றுப் பிழைப்பதையா தமிழீழமும் விற்று பிழைக்கப் போகிறது? அந்த நிலை தமிழீழத்துக்கு வரக்கூடாது.
Reply


Messages In This Thread
[No subject] - by killya - 05-30-2005, 09:39 PM
[No subject] - by sinnappu - 05-30-2005, 10:05 PM
[No subject] - by Nitharsan - 05-30-2005, 11:16 PM
Re: அமெரிக்கா புலிகளுடன் கைகோர்க்குமா?.......... - by Jude - 05-31-2005, 12:16 AM
[No subject] - by sathiri - 05-31-2005, 12:52 AM
[No subject] - by cannon - 05-31-2005, 01:03 AM
[No subject] - by cannon - 05-31-2005, 01:21 AM
[No subject] - by sathiri - 05-31-2005, 01:57 AM
[No subject] - by vasanthan - 05-31-2005, 05:52 PM
[No subject] - by குத்தூசி - 05-31-2005, 09:08 PM
[No subject] - by kuruvikal - 06-01-2005, 02:13 PM
[No subject] - by kathirs - 06-01-2005, 11:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)