05-30-2005, 07:06 PM
Quote:ஸ்ராலின் அண்ணா கேட்டது போல சில வேளைகளில் பார்க்கிற காட்சிகள் அல்லது சம்பவங்கள் ஏற்கனவே பார்த்தது போல அல்லது நடந்தது போல இருக்குமே அது எதால என்று தெரிஞ்சவை சொல்லலாமே
இதை "Deja Vu"(in French) என அழைப்பார்கள்....."Already Seen" என்னும் ஆங்கிப் பதத்தின் French மொழியாக்கம்.....இதை French ஆய்வாளர்கள் முதலில் கண்டுபிடித்ததால் இதற்கு French மொழியில் பெயரிட்டு இருக்கிறார்கள்...இந்த உணர்வு ஏற்படுவதற்கு பலர் பல காரணங்களை கூறி வருகிறார்கள் வந்தார்கள்...அதில் ஒன்று முற்பிறப்பு ஞாபங்கள் (reincarnation) ஆனால் அதை மறுத்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்..... Survey இன் கணக்கெடுப்புக்களின் படி மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இப்படி உணர்ந்து இருக்கிறார்கள்.....Memory researchers (ஞாபக ஆய்வாளர்கள்(?)சரியாகத் தெரியவில்லை) ஒருவரான Dr. Brown இன் கூற்றுபடி அழுத்தத்தில் (exhausted or stressed) இருப்பவர்களில் அத்துடன் நீண்ட அல்லது குறுகிய ஞாபகங்களை (short term and long term memeory) சிதைக்கக் கூடிய சூழ்நிலைகளிலும் இருப்பவர்களில் பொதுவாகக் காணப்படுவதாக.
Psychologists ஆரம்ப காலங்களில் இருந்தே தெரிந்த விடயம் அதாவது மக்கள் தாங்கள் காட்சிகளை உள்வாங்கிக் கொண்டோம் என உணராமலே உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை....அதாவது எமது மூளை நாம் காணும் காட்சிகளின் குறிப்பை இரண்டு இணைப்புக்கள் (circuits) வழி அனுப்புகிறது...இந்த குறிப்புக்கள் கண்களில் உள்ள retina வழி சென்று மூளையினுடாக சென்று visual cortex ஜ அடைகிறது வேறு வேறு வழிகளில்......
இதனால் நமக்கு தெரிய முன்பே அது எமது மூளையை அடைவதனால் எமக்கு அதை முன்பே கண்ட அல்லது உணர்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.....
(எனக்கு தெரிந்தது இவ்வளவும் தான்..) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "
" "

