09-25-2003, 04:20 AM
மதிவதனன் இங்கு இணைக்கும் செய்தியில் சில விபரங்கள் இருக்கின்றது. ஆனால் இதைவிட இன்னமும் நிறைய எதிர்ப்பிரச்சாரங்களும், சதிகளும் செய்யப்பட்டு சவால்களும் இங்குள்ள சிறீலங்கா பிரதிநிதியால் விடப்பட்டது.
செய்தி
[b]வெற்றியடைந்தே தீருவோம் என்று ஈழத்தமிழர்கள் முடிவு செய்தால் அதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்பதற்கு உதாரணம் தேடுவோர் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவைக் கவனியுங்கள். இங்கு நடந்தேறிய உள்ராட்சித் தேர்தலில், ஒஸ்லோ மாநகரசபை பிரதிநிதியாக யோகராஜா பாலசிங்கம் (பாஸ்கரன்) என்கின்ற ஒரு தமிழர் ஒருவர் முதற்தடவையாகத் தெரிவாகியுள்ளார். நோர்வீஜியர்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு வழமையான சமாச்சாரம்.
ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தரையில் இந்தத் தேர்தல் சிங்கள இனவெறியர்களுடனான இன்னொரு யுத்தமாகியிருந்தது. யோகராஜா பாலசிங்கம் என்கின்ற ஒரு தமிழர் ஒருவர் முதற்தடவையாக வென்று புலம்பெயர்ந்த தமிழர்களின் வெற்றிக் கதைகளுக்கு இன்னொரு கதை சேர்த்த பெருமிதம் ஒரு புறமிருக்க- வெறிகொண்ட நாயாக எங்களை இங்கும் துரத்திய சிங்கள இனவாதத்தை ஈழத்தமிழர்கள் எங்ஙனம் தோற்கடித்தனர் என்பதுதான் ஈழத்தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அறியவேண்டிய கதை. நீண்டகாலமாக தமிழர்கள் ஒஸ்லோவில் வாழந்தபோதும் உள்ளூராட்சி அரசியலில் தங்களை அடையாளம் காட்டுவதில் தமிழர்கள் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் முழுக்கவனமும் தாயக அரசியலில் குவிந்திருந்தமையினாலும்- "வெள்ளையளின்ர விசயங்கள்" என்று அலட்சியத்துடன் இருந்தமையினாலும் இங்கு நடைபெறுகின்ற தேர்தல்களில் தமிழர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் இந்த நிலை மாற்றப்படவேண்டும்- இந்த நாட்டு அரசியலிலும் எங்களின் அடையாளம் பதிக்கப்படவேண்டும்- என்று கருத்து எம்மவர்களால் அண்மைக்காலமாக வலுவாக விவாதிக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக யோகராஜா பாலசிங்கம் தமிழர்களால் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
நம்மவர் ஒருவரை ஒஸ்லோ மாநகரசபை பிரதிநிதியாக அனுப்பி வைக்கவேண்டும் என்றிருந்த தமிழர்களின் ஆர்வத்தை- முற்றிலும் எதிர்பாரத வகையில் கிளம்பிய சிங்கள இனவெறியர்களின் தலையீடு ஒரு சவாலாக மாற்றிவிட்டது. தமிழர் ஒருவர் ஐரோப்பிய நாட்டுத் தலைநகர் ஒன்றின் நகரசபைப் பிரதிநியாக வந்துவிடக்கூடும் என்ற தகவல் எட்டியதும் சிங்கள இனவாத ஊடகங்கள் கூக்குரலிடத்தொடங்கின. விடுதலைப் புலிகளின் - அதாவது ஒரு பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரான யோகராஜா பாலசிங்கம் எப்படித் ஒஸ்லோ மாநகரசபை தேர்தலில் நிற்கலாம்? இலங்கையைப் பிரிப்பதற்கு நோர்வே துணைபோகின்றது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை? என்றெல்லாம் ஊளையிட்டன. இதழியல்துறையின் அவமானங்களான பந்துல ஜெயசேகரா(LacNet) இக்பால் அத்தாஸ்(Sunday Times) போன்ற இனவாதப் பத்திரிகையாளர்கள் யோகராஜா பாலசிங்கத்தை இத்தேர்தலில் போட்டியிடாது தடுப்பதற்காக பெரும்பிரயத்தனப்பட்டார்கள். தாங்கள் எழுதிய செய்திகளையே ஆதாரமாகக் காட்டி, தற்போது உலகில் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கிருக்கும் பரபரப்பை கணக்கிட்டு நோர்வீஜிய ஊடகங்களை உசுப்பிவிட்டார்கள். இந்த இனவாதிகளின் தூண்டுதலால் நோர்வீஜிய ஊடகங்களும் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரான யோகராஜா பாலசிங்கம் எப்படி ஒஸ்லோ மாநகரசபை தேர்தலில் நிற்கலாம்? என்று கேட்க ஆரம்பித்தன. இங்குள்ள சிங்களவர் சங்கமும் உறுமியது.
இந்த இனவாதிகளின் திட்டத்தைப் புரிந்துகொண்ட தமிழர்கள் திரண்டெழுந்தனர். ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் வீதிகள்தோறும்- வீடுகள்தோறும் பரப்புரைப்பணியில் ஈடுபட்டார்கள். பல்வேறு தமிழர் அமைப்புகளும் யோகராஜா பாலசிங்கத்தின் வெற்றியை உறுதிசெய்யப்பாடுபட்டனர். இதன் விளைவாக யோகராஜா பாலசிங்கம அதிகளவில் விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். வெற்றியடைந்தே தீருவோம் என்று ஈழத்தமிழர்கள் முடிவு செய்தால் அதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?