05-30-2005, 12:30 PM
Quote:எனது பதில் பலரின் வாழ்க்கையை பார்த்து எழுதப்பட்டது. உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும். அதற்காக அது இல்லாமல் ஆகிவிடாது. இன்று கூடுதலாக விவாகரத்துப் பெற்றிருப்போர் காதலித்துத் திருமணம் செய்தோரே. காதலில் ஜெயித்தவர்கள் வாழ்கஇகையில் தோற்றால் அதிலென்ன இலாபம். பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள். வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கையின் சூட்சுமங்கள். இது புரியாமல் நீர் குளம்பிப் போயுள்ளீர். அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??
ம்........... நீங்கள் சொல்வதுபோல வாழ்ந்தவர்களுக்குத்தெரியும் வாழ்க்கையில் எப்படி அடங்கி அடக்கி வாழ்வதேன்று. :?
Quote:பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள்அந்த பலதுகள் எவை? நான் பார்த்த பெற்றோர்கள் சற்று சர்வாதிகாரபோக்கானவர்கள்தான். காதலித்து மணம்முடித்தவர்கள்தான் அதிகம் விவாகரத்து பெற்றிருக்கின்றனர் என்பதற்கு நான் நினைப்பது இதுதான். நானாக தெரிந்து எடுத்துக்கொண்ட வாழ்க்கை எனக்குப்பிடிக்கவில்லை.அதனால் நானே அதை முறித்துவிடலாம் என்ற எண்ணத்தினால். இதையே பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணங்கள் அவர்களுக்கு விருப்பமில்லாப்பட்சத்தில் அவர்கள் இவ்முடிவை எடுப்பதில் சற்று கஸ்டமாகவேயிருக்கும். நீங்கள் சொன்னதுபோல நான் குழம்பித்தான் போயுள்ளேன். ஆனால் என் குழப்பத்திற்கு காரணம் வேறு.
Quote:அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??அதுசரி என் அதை என்தலையில்போடுகிறீர்கள். நான் சாமியாராக போய்விடலாம் என்று 2 வருடங்களுக்கு முதல் நினைத்திருந்தேன். தற்போது அதற்கும்வழியில்லாமல் (பயத்தால்) யோசித்துக்கொண்டிருக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

