05-30-2005, 02:26 AM
சியாம். இது சற்று அதிகம் தான். சரி அவன் அப்படி கேட்டிருந்தால் நீங்கள் மரியாதையாக உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இல்லை என்று சொல்லிவிடலாம் தானே. அதுதான் ஐரோப்பிய / மனித நாகரீகம். ஏனென்றால் நாம் அவர்கள் தேசத்தில் தான் வாழ்கிறோம். ஒருகதைக்கு நீங்கள் அடிக்கும் போது ஏதும் எக்குத்தப்பாக நடந்து அடிவாங்கியவன் உங்களுக்கு எதிராக வழக்குப் போட்டு உங்களை அடிக்க விடாது தடுத்தவர்கள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால் அப்புறம் உங்கள் நிலை??????? அது போக நாங்கள் வெள்ளைகளை கண்டபடி சண்டைக்கு இழுத்து அடிக்கிறோம் அப்போது வெள்ளைகளும் அடியை வாங்கிக்கொண்டு போகின்கின்றனர் ஏதோ வெள்ளைகளும் எங்களுக்குப் பயந்தவர்கள் என நாம் நினைத்துவிடக்கூடாது. அவர்கள் அவர்கள் நாட்டு சட்டங்களுக்குப் பயந்தே அப்படி ஒதுங்கிப் போகின்றனர். உண்மையில் வெள்ளையரோ அல்லது ஆபிரிக்கரோ எங்களை விட நன்றாகவே உடன் வாகு கூடியவர்கள் அவர்கள் ஒருவேளை எம்மை திருப்பி மூர்க்கமாகத் தாக்க முற்பட்டால் எம்மால் ஒருவனின் அடியையே தாங்கமுடியாமல்ப் போகும். சிரிக்காமல் இதை எங்களின் அனுபவம் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

