Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீ தின்ற எங்கள் யாழ்நூலகம் 24ஆண்டுகள் தாண்டிய நினைவுப்பதிவு.
#2
நன்றி சாந்தி! 80களின் ஆரம்பத்தில் நிகழ்ந்த கறை படிந்த சோக நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றதற்கு ........

.....அன்று காலை விடிய ஊரெல்லாம் செய்தி பரவத்தொடங்கியது. இளையர்களெல்லாம் ஊரிலுள்ள கூட்டணி காரியாலயம் முன் கூடத்தொடங்கினார்கள். சிறுவனான நானும் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கூட்டணிக் காரியாலயம் முன் போய் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கூட்டணியின் ஊர்ப் பிரமுகர், கூடி நின்றிருந்த இளையர்களை அடித்துத் திறத்தினார். ஆச்சரியம்! அந்தத் தினத்திற்கு முதல்நாள் மட்டும் யாழ் மாவட்டசபை தேர்தலுக்காக அடிதடிகள், கள்ள வாக்களிக்க, இவர்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட! மேடைகளில் இவர்கள் முழங்கும்போது கைகளை கத்தியினால் கீறி வெற்றித் திலகமிட்ட! அதே இளையர்கள்தான் அவர்கள்!! காரணம் இன்று விளங்கக்கூடியதாகவுள்ளது. .... அப்படி இந்த நூலக எரிப்புக்களையும் இவர்கள் கொழும்பு சென்றவுடன் மறந்து விட்டார்கள். சாப்பாட்டுக்கு ஊறுகாய் போல, இவர்களுக்கு இப்படிச் சம்பவங்கள் நடைபெற்றால்தான் அவர்களது அரசியல் வாழ்வு பிரகாசிக்கும். ஆனால் இக்கோரத்தாண்டவமாடியதற்கு ஏவிய சிங்கள வெறியன் எம் கண் முன்னாலேயே துடி துடித்து இறந்தான்! .... ஆனால் இன்றோ .. எமக்கொரு வலிமையான படை. குட்டித்திரிந்தவர்களுக்கு திரும்பிக் குட்டாதே, குட்டிய கைகளையே எடுத்துவிடும் உறுதி! உலகே வியக்கும் உன்னதத் தலைமை!

ஆனால் சிங்களம் விதைத்தவைகளை காலத்தில் நாங்கள் அறுபடை செய்தே தீர வேண்டும். பெற்ற கடன்கள் திரும்பக் கொடுத்தே தீரவெண்டும். அதற்கு காலம் நேரம் கனிந்தே வரும்!
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Nellaiyan - 05-29-2005, 11:29 PM
[No subject] - by Nilavan - 05-31-2005, 07:47 PM
[No subject] - by kavithan - 06-01-2005, 01:49 AM
[No subject] - by sathiri - 06-01-2005, 02:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)