05-29-2005, 03:14 PM
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/May/29/f-5.jpg' border='0' alt='user posted image'>
புலிகளின் பகுதிக்கு அடுத்த தடவை செல்வேன் - கல்முனையில் கிளின்டன் தெரிவிப்பு
வட, கிழக்கில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணைந்து முன்னெடுப்பதற்கான உத்தேச `பொதுக்கட்டமைப்பு' ஏற்பாட்டுக்கு தனது முழுமையான ஆதரவை இலங்கையின் உள்ளூர்த் தலைவர்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த விரும்பியதாக தெரிவித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கடல்கோள் புனர்நிர்மாணத்திற்கான ஐ.நா.வின் விசேட தூதுவருமான பில் கிளின்டன், அடுத்த தடவை இலங்கைக்கு வருகை தரும்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று பார்வையிடவிருப்பதாக தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாட்டிலிருந்து கொழும்புக்கு வருகைதந்த கிளின்டன் நேற்றுச் சனிக்கிழமை கல்முனைக்குச் சென்று கடல்கோளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பொதுக்கட்டமைப்பு தொடர்பாக உள்ளூர் தலைவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த விரும்புவதாக கிளின்டன் தெரிவித்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு ஏன் விஜயம் செய்யவில்லையென கிளின்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், `நான் மீண்டும் வருவதற்கு உத்தேசித்திருக்கிறேன். அடுத்த தடவை அங்கு (புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி) செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன். இந்த நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் செல்ல விரும்புகிறேன். இத்தடவை ஒரே ஒரு சந்திப்புக்கு மட்டுமே நேரம் கிடைத்திருக்கிறது. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், பௌத்தர்களை நான் சந்திக்க விரும்பினேன்.
இந்த நோக்கம் நிறைவேறியிருப்பதாக கருதுகிறேன். ஏனெனில், சகல சமூகங்களினதும் பிரதிநிதிகளையும் சந்திக்க முடிந்தது' என்று கிளின்டன் குறிப்பிட்டிருக்கிறார்.
மீள் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க பொதுக்கட்டமைப்பு முக்கியமானதொன்று என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடல்கோள் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையிலிருந்து 100 - 200 மீற்றர் எல்லைக்குள் வசித்தோருக்கு வேறு இடங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து அக்கறை காட்டிய கிளின்டன், இந்தத் திட்டம் எல்லா வேளைகளிலும் நடைமுறை சாத்தியமானதாக அமையாது என்றும் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலமான வீடுகளை அமைத்தலே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்றும் சமூகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது கிளின்டன் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு செல்லும் கிளின்டன், பின்னர் அங்கிருந்து இந்தோனேசியாவின் அசே மாகாணத்துக்கு செல்வார். அசேயில் 2,28,000 பேர் கடல்கோளால் பலியாகியுள்ளனர்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>