05-29-2005, 10:53 AM
hari Wrote:என்ட மகளை இரண்டு நாளா காணவில்லை. எல்லோரும் எதை எதையோ சொல்லி என்ட மகளை கலைச்சுட்டிங்கள் போல இருக்கு , என்ட மகளுக்கு ஏதாவது நடந்தது என்றால் எல்லோரையும் கூண்டோடு அழிச்சுடுவன் ஜாக்கிரதை! :evil: :evil:
வா மகளே..! வா மகளே..!
விதி மேல் பழி போட்டு
வழி மேல் விழி வைத்து
பதியே கதி என்று
களிப்போடு இருந்தவளோ...?
கதைகளாய் சொன்னவற்றை
விதைகளாய் இட்டு
பாதைகள் அமைத்து
இளவரசன் தேடினோம் அது தப்பா...?
சில தவறு விட்டாலும்
பல காலம் நீ யில்லை என்று
மலையாக இருந்த தந்தை
சிலையாகி விட்டார்
மழலை உன்னைகாணும் வரை
ஊண் இல்லை உறக்கம் இல்லை என
உறங்கிய வாளையே- சண்டையில்
இறக்கிட துணிந்திட்டார் உன் தந்தை
கூட்டுக்குள் இருந்தாலும்
குருவியாய் இருந்தாலும்
கருவியால் அழித்திடுவேன் என
மார் தட்டி நிக்கிறார் மன்னன்.
சேற்றுக்குள் புதையுண்ட
தேர்ச்சில்லைக் கூட
ஊர் கூடி எடுத்திட்டால் போச்சு என்று
சோர்வாக நிக்கின்ற மன்னர்
போர் கோசம் போடுகிறார்.
வாராயோ மகளே - என்னை
சேராயோ என் வாரிசே என
யாரோவிடம் எல்லாம் கேட்டு
இளவரசை தேடுறார்... :wink:
[b][size=18]

