Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான்...!
#1
[size=18]<b>நான்...!</b>


என் ஒரே ஒரு
உடலுக்குள்...
மூன்று உயிரினங்கள்...!

ஒரு உயிருக்கு
காதலன் என்று பெயர்

ஒரு உயிருக்கு
கவிஞன் என்று பெயர்

அடுத்த உயிருக்கு...?
அதற்கு...
'''நான்'' என்று பெயர்...!

காதலன்
இவன் பாலைமட்டும்
பிரித்துப் பருகும்
அன்னப் பறவை...!
அதாவது...
துன்பங்களை விலக்கிவிட்டு
இன்பங்களை மட்டும்
அனுபவித்துக் கொண்டிருப்பவன்

வாழ்வில்...
ஒரு வினாடிகூட
வீணாக்காமல்
பாரெங்கும்
பரவிக்கிடக்கும்
சொற்கத்தை
அள்ளித் தோளிலேசுமந்து
சிரித்துக்கொண்டே
பாடித்திரிபவன்...!

துன்பம் என்றால்
என்ன...?
அது எப்படி இருக்கும்..?
அதை...
இவன் அறியமாட்டான்...!

அடுத்ததாக...
கவிஞன்
இவன் கூடுவிட்டு
கூடுபாயும் வித்தைகற்றவன்...!
மலருக்குள் சென்று
வாழ்ந்துவிட்டு வருபவன்
நிலவுக்குச் சென்று
கதைபேசித் திரிபவன்
மழையோடு பாடுபவன்
நதியோடு ஓடுபவன்
சமுதாயத்தோடு வாதாடுபவன்
இல்லையேல்...
போராடுபவன்...!
அடுத்தவன் காயம்
அடுத்தவன் உணர்வு
அது....
எப்படி இருக்கும்...?
இப்படி...
சிந்திப்பவன்..!
அடுத்தவன் அழுதால்
தனியே அழுபவன்
அடுத்தவன் சிரித்தால்
சேர்ந்தே சிரிப்பவன்..!

காதலன்
ஆனந்தமாய் ஆடித்திரிய
அவதரித்த...
உல்லாசப் பயணி

கவிஞன்
அமைதியாய் அவதானமாய்ப்
புறப்பட்ட...
இலக்கைநோக்கிய பயணி
காதலன் பாதைவேறு
கவிஞனின்
பயணம்வேறு...!
இருப்பினும்...
இருவருக்கும் இடையில்
ஒரு அறுந்துவிடாத
தொப்பிள் கொடி உறவு...!

ஆனால்...
இந்த மூன்றாவது
உயிரான ''நான்""
என்பவன் இருக்கிறானே...
அவன்
எப்போதும்
செய்தது நான்
சொன்னது நான்
எல்லாம் நான்
நானே நானே என்பவன்
இவன் ஆணவக்காரன்
கொடியவன்
மோசக்காரன்...!

நஞ்சுதடவிய
கூரம்பால்...
கவிஞனை அழிக்க நினைப்பவன்...!

இதை
கவிஞன் அறியமாட்டான்
காதலன் அறிவான்
கவிஞனை அழிக்க
எப்போதெல்லாம்
''நான் '' என்பவன்
கூரம்பை விடுகிறானோ...
அப்போதெல்லாம்
காதலன் ஆவேசமாய்ப்பாய்ந்து
அழிக்கவந்த அம்பை
எரித்துவிடுகின்றான்..!
பிறகு...
""'நான்"" என்பவனை
அடித்து அடக்கி விடுகிறான்..!

இல்லையேன்றால்...
என் உடலில் உள்ள
கவிஞன் என்ற உயிர்
எப்போதோ.....
மரித்திருக்கும்...!!!

த.சரீஷ்
23.09.2003 (பாரீஸ்)
sharish
Reply


Messages In This Thread
நான்...! - by sharish - 09-24-2003, 03:59 PM
[No subject] - by Paranee - 09-24-2003, 04:45 PM
[No subject] - by kuruvikal - 09-24-2003, 05:33 PM
[No subject] - by PATCHI - 09-24-2003, 07:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)