05-29-2005, 04:19 AM
kirubans Wrote:அண்மையில் புதிசு சஞ்சிகையில் வந்த கட்டுரை ஒன்றில் உள்ள கேள்விகள். இக்களத்தில் வருபவர்களில் பெரும்பாலானோர் புலிகளின் (அதன் மூலம் தமிழ் தேசியத்தின்) ஆதரவாளர்கள் என்றே எண்ணுகிறேன். எனினும் உங்கள் பார்வையில் புலிஎதிர்ப்பாளர்களின் பதில்கள் எவ்வாறு இருக்கும் என்று எழுதங்களேன். நீங்கள் உண்மையிலேயே புலி எதிர்ப்பாளர் எனின் உங்கள் சொந்தக் கருத்துக்களயும் முன்வைக்கலாம்.
<b>புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினர் மக்களுக்காக எதுவும் செய்ய விரும்பின் அல்லது அவர்களை புரிந்துகொள்ள பின்வருவனவற்றுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும். </b>
<b>
1.புலிகளுக்கு மாறாக நீங்கள் முன்வைக்கும் மாற்று தலைமையின் வடிவம் தான் என்ன?</b>
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தாம் விடுதலைப்போராளிகள் என்றும் தாம் அரசியல்வாதிகள் அல்ல என்றும் கூறியிருந்தார். மேலும் மக்கள் தம்மைத்தாமே ஆளும் ஒரு மக்களாட்சியை கொண்டிருக்க வேண்டும் எள்றும் கூறியிருந்தார். விடுதலைப்புலிகள் தமிழீழத்தின் இராணுவமாகவும் அதன் தலைவர் இந்த இராணுவத்தின் தலைவராகவும் இருப்பது தமிழீழ மக்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது. ஆணால் அரசியலும் அரசியல்வாதிகளாகவும் விடுதலைப்புலிகள் மாறினால் அது அவர்களது மதிப்பை குறைப்பது மட்டுமன்றி, இராணுவப் பணிக்கான ஆட்பலத்தையும் குறைத்து தமிழீழத்தை மாற்றாரின் ஊடுருவலுக்கும் இலக்காக்கும். உதாரணமாக, தற்போது அரசியலில் விடுதலைப்புலிகள் அக்கறை காட்ட ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட விடுதலைபபுலிகளின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் கருணாவின் பிளவில் அந்நிய புலனாய்வு துறைகளின் செயற்பாடுகளையும் காட்டலாம்.
ஆகவே மாற்று தலைமை என்பது மாற்று அரசியல்வாதிகள் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வருவதற்கான தலைமையே அன்றி இராணுவ பொலிஸ் தலைமைத்துவத்திற்கான மாற்றமல்ல. அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் அல்லது விலைபோனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடுதலைப்புலிகளின் கட்டமைப்பிலும் தலைமைத்துவத்திலும் இயங்கும் பொலிஸ் சேவை இருக்கிறது.
<b>
2.புலிகளை எதிர்க்கும் உங்கள் பொருளாதார வடிவம் தான் என்ன?</b>
விடுதலைப்புலிகளின் ஆட்சியில் முதலீட்டு பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருப்பதாக தெரிகிறது. முதலீட்டு பொருளாதார நிறுவனங்கள் தமிழீழத்தில் முதலீடு செய்ய அங்கு வரிகளை ஆக்குவதற்கு நன்கு அறியப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகள் பின்பற்ற பட்டு, எதிர்பார்க்காத செலவினங்கள் உருவாகும் சூழ்நிலைகள் இல்லாதொழிக்கப்பட்டு, உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். முதலீட்டு பொருளாதாரத்துக்கு உறுதியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
தனியார் சொத்துக்களை கைப்பற்றும் ஜேவிபியின் கொம்யூனிச கொள்கைகளுக்கு இடம் இருக்க கூடாது.
<b>
3.சிங்கள இனவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் தான் என்ன?
</b>
அரசியல்வாதிகள் தாம் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவதும் அதில் ஒன்று. இவர்களை சட்டம் கட்டுப்படுத்தி பொலிஸ் அதை அமுல் படுத்த வேண்டும். இலங்கையில் சட்டம் இதை செய்யத்தவறி வருகிறது. சிங்கள அரசியல்வாதிகளும் அமிர்தலிங்கம் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறு இனவாதத்தின் மூலம் நன்மையடைந்தார்கள். தமிழீழத்தில் அதற்கு இடம் இருக்க கூடாது.
<b>
4.ஏகாதிபத்தியம் பற்றி உங்கள் நிலைப்பாடு தான் என்ன?</b>
"ஏகாதிபத்தியம்" என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தனியொரு தலைமையின் அடக்கு முறை ஆட்சி என அர்த்தம்.
<b>
5.அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தான். இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான் என்ன? </b>
"அரசு சாராத தன்னார்வ குழுக்கள்" என்று குறிப்பிடுகையில் இதனுள் விளையாட்டு கழகங்கள்; மக்கள் அமைப்புக்கள் பொழுது போக்கு நிறுவனங்கள் சேமிப்பு நிறுவனங்கள் என்பன அடங்கும் இவை அரசு சாராதவை. தன்னார்வ தேவை கருதி உருவானவை. இவற்றிற்கும் ஏகாதிபத்தியத்துக்கும் (ஒரு தலைமை வல்லாட்சி) சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.
<b>
6.மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வு என்னவாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?</b>
நிறைவே பின்தங்கி இருக்கிறது பொருளாதார முன்னேற்றமும் பாதுகாப்பும் மக்களுக்கு முக்கியமாக தேவை. சுனாமியை அடுத்து விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தன. இவை மேலும் பெரிய அளவில் செய்யப்பட வேண்டும்.

