05-28-2005, 07:27 PM
டைட்டான் உலகம்
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/May/28/tita.jpg' border='0' alt='user posted image'>
சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களில் மிகவும் அழகான வளையங்களைக் கொண்டுள்ளது சனிக்கோள்.அதுமட்டுமல்லாமல்,பூமியை ஒத்த துணைக்கோள்ளைக் கொண்டது.பூமியின் மேற்பரப்பை போன்று உள்ள சனிக் கோளின் துணைக்கோள் டைட்டான் (Titan) என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோள்களில் மிகவும் பெரிய கோள் வியாழன்.இரண்டாவது பெரிய கோள் சனிக்கோள்.பூமிக்கு அடுத்த உயிர்வளிக்கோளாக இருக்கலாம் என்ற அளவில் நம்பிக்கை கொண்டதாக உள்ளது செவ்வாய்க் கோள்.
வியாழன் கோளின் துணைக் கோளான "யுரோப்பாவும்" சனிக்கோளின் துணைக்கோளான "டைட்டானும்" பூமியின் நிலை ஒத்ததாக இருக்கலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சனிக்கோளானது சுமார் 1,20,536 கி.மீ. விட்டம் கொண்டது.சூரியனிலிருந்து 142.7 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.சனிக்கோளுக்கு 23 துணைக்கோள்கள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் டைட்டான்.
டைட்டானைக் கண்டுபிடித்தவர் டச்சு நாட்டைச் சார்ந்த அறிவியல் அறிஞர் கிறிஸ்டியன் ஹைஜென் ஆவார்.சனிக்கோளை ஆராய அனுப்பப்பட்ட யுரோப்பாவின் தாய் விண்கலம் காசினியிலிருந்து சென்ற ஹைஜென் ஆய்வுக்கலம் டைட்டானில் கடந்த ஜனவரி 15 இல் தரையிறங்கியது,துணைக்கோள்கள் ஆய்வுகளின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் நவம்பர் 1980 இல் டைட்டானை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட வாயேஜர் -1 என்ற விண்கலம்,டைட்டானுக்கு 4,000 கி.மீ. அருகில் சென்று,ஆய்வு செய்து டைட்டானின் வளிமண்டலம் பூமியின் வளிமண்டலத்தை ஒத்து இருப்பதாக தகவல் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஹைஜென் விண்கலம் அனுப்பிய புகைப்படத்திலிருந்து டைட்டானில் காணப்படும் கரகரப்பான மணலைப் போன்றதொரு மேற்பரப்பு நமது பூமியின் மேற்பரப்பை ஒத்துள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹைஜென் விண்கலம்,நேரிடையாக டைட்டானின் தரைப் பகுதியிலோ வளிமண்டலத்திலோ நுழையாமல் 10 கி.மீ. உயரத்தில் பல மணிநேரம்,டைட்டானைச் சுற்றி பறந்த பிறகு தான் டைட்டானில் தரையிறங்கியது.அங்கு சுமார் 4 மணிநேரம் ஆய்வு செய்து பல அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது.தானியங்கித் தகவல் சேகரிப்பு சாதனங்களின் பழுது காரணமாக, மேலும் புகைப்படங்களைப் பெற இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
உறைந்த பனி உலகமான டைட்டானின் மேற்பரப்பு கருமையான திரவக்கடலை உடைய பகுதியாகவும் பாறைகளை உடைய பகுதியாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வெண்மையான பகுதிகள் உறைந்த மீதேன்கள் என்றும் கருதப்படுகிறது.
1944 ஆம் ஆண்டில் ஜெரார்டு குய்ப்பர் என்ற அமெரிக்க வானவியல் அறிஞர் டைட்டானின் வளிமண்டலத்தில் மீதேன் வாயு அதிகமாக இருக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார்.அவரின் கருத்தினை உறுதி செய்யும் வகையில் "டைட்டானின்" இப்போதைய புகைப்படங்களை வைத்து,அதன் மேற்பரப்பில் உள்ளவை,திரவங்களாகவோ அல்லது திரவங்கள் ஓடிய பாலைவனமாகவோ இருக்கலாம்".என்று கூறியுள்ளனர்.டைட்டானின் வளிமண்டலத்தில் விண்கலன் நுழைந்தவுடன் ஆயிரக்கணக்கான தேனீக்களின் ரீங்கார ஓசை எழுப்புவது போல் இருந்ததாகவும், அதனை "டெக்னோ மியூசிக்" என்றும் வேடிக்கையாக வர்ணித்துள்ளனர்.
டைட்டானின் மேற்பரப்பில் காணப்படும் உறைந்த பனிக்கட்டிகள்,கைமூடிய அளவில் சிறிய பந்துகள் போல் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும் அங்கு நிலவும் வெப்பநிலை -180 டிகிரி சென்டி கிரேட் அளவில் கடுங்குளிராக உள்ளது.டைட்டானின் மேற்பரப்பில் உள்ள மண் பிசுபிசுத் தன்மை கொண்ட எண்ணெய் கலவை கொண்டதாகவும்,மணல் போன்றும்,ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆனதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் ஈதேன்,அசிடிலின் மற்றும் ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளிலிருந்து மீதேன் வாயு வெளிப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக டைட்டான் ஆய்வு மேற்கொண்டுள்ள வானவியல் அறிஞர் ஜெர்னிக்,தனது குழுவினரின் அயராத முயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
"டைட்டான் ஆய்வுகள் நமது பூமியின் ஆரம்ப கால நிலை பற்றி அறிய உதவும் வகையிலும்,சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்தும்,மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு காலக்கருவியாக (Time Machine) இருக்கும்" என்று அஸ் அல் டயஸ் ( As Al Diaz) என்ற வானவியல் அறிஞர் கருத்து வெளியிட்டுள்ளார்.பூமியின் பல்வேறு வளிமண்டல அடுக்குகள் போன்றே,டைட்டானிலும் வளிமண்டலம் பரவியுள்ளது.டைட்டானின் மேற்பரப்பிலுள்ள பனிக்கட்டிகளில் மீதேன் திரவ மழையினால் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு,அப் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறி,உயிரணுக்கள் தோன்ற வாய்ப்புகள் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடன் டைட்டானின் ஆய்வுப் பணிகள் தொடர்கின்றன.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>