Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் நாட்காட்டி
#7
மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியாது!
(நக்கீரன் - கனடா)


சோதிடம் கோள்களை பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திர வர்ணம் என்றும், ஆண், பெண், அலி என்றும், நீர், நெருப்பு, பூமி (பிருதிவி) காற்று, வானம் (ஆகாசம்) என்றும், பகை (சத்துரு) மித்துரு (நட்பு) உச்சம், ஆட்சி, கேந்திரம் என்றும், யோகம் (யோகக்காரர்கள்) கண்டம் (மாரகாதிபதிகள்) ஆரோக்கணம் அவரோக்கணம் என்றும் பாகுபடுத்துகிறது.

கோள்களைப் போலலே இராசிகளையும் நீர், நெருப்பு, பூமி (பிருதிவி) காற்று, வானம் (ஆகாசம்) என்றும், ஆண் பெண் எனவும், பகல் இரவு எனவும், சரம், ஸ்திரம், உபயம் எனவும், உச்சம் நீச்சம் எனவும், திதி சூன்யம் எனவும் பிரிக்கிறது.

இவ்வாறு விதிக்கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் பகுப்பதற்கும் பிரிப்பதற்கும் வானியல் அடிப்படையில் எதுவித முகாந்திரமும் இல்லை. வானியலின் படி கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் உயிரற்றவை, உணர்ச்சியற்றவை, அறிவற்றவை ஆகும்!

இந்திய சோதிடம் வானியலாளர்கள் கண்டுபிடித்த யுரேனியஸ், நெப்தியூன் புளுட்டோவை கணக்கில் எடுப்பது இல்லை. பின் சோதிடம் ~அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கொண்டது| என எப்படிக் கூறமுடியும்?

கடந்த ஆண்டுகளில் புதிதாக 28 பெருங்கோள்களும் 1,000க்கும் மேற்பட்ட குறுங்கோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சோதிடத்தில் சூரியனையும் சேர்த்து ஒன்பது கோள்கள் மட்டுமே உண்டு. இந்த ஒன்பது கோள்களை வைத்து சோதிடர்கள் நடத்தும் வியாபாரம் எப்படிச் சரியாகும்?

சோதிடத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உண்டு. ஆனால் வானியலில் 112 பெரிய சந்திரன்களும் 16 சிறிய சந்திரன்களும் ஆக மொத்தம் 128 வெண்ணிலவுகள் உண்டென்கிறது.

சோதிடர்கள் இந்த 128 நிலாக்களில் பூமியின் துணைக் கோளான நிலாவை மட்டும் வைத்துப் பலன் கூறிவிட்டு எஞ்சிய 127 நிலாக்களையும் தள்ளிவிடுகிறார்கள்.

~சாதகம் அறிவியல் ரீதியான ஆதாரங்களைக் கொண்டது| எனக் கூறும் கட்டுரையாளர் 128 நிலாக்களை தள்ளிவிடுவது அறிவியலா?

சென்ற மாத நடுப்பகுதியில் சனிக் கோளுக்கு ஏவப்பட்ட Cassini-Huygens விண்கலம் முறையே 194,000, 211,000 கிமீ உயரத்தில் இரண்டு புதிய நிலாக்கள் சனிக் கோளை வலம் வருவதைக் கண்டு பிடித்துள்ளது.

சோதிடம் பூமி என்னும் கோளைக் கணக்கில் எடுப்பதில்லை. அறிவியலில் ஞாயிறு ஒரு விண்மீன். நிலா ஒரு துணைக்கோள். இராகு கேது கற்பனைக் கோள்கள். பின் எப்படி சோதிடம் அறிவியலாகும்?

மேலும் ~ப+மி, கிரகங்கள், சூரியக் குடும்பம் எப்படி உருவானது? பரம்பொருளின் எண்ணத்தில் பிறந்த படைப்பு! எண்ணம் என்று ஆன்மீகம் கூறுவதும் அதிர்வு என்று அறிவியல் கூறுவதும் சரிசமம்தான். ஆன்மீகம், அறிவியல் இரண்டும் கூறுவது ஒரே கருத்துக்தான்! வார்த்தைகள் தான் வேறு!| என்கிறார்.

அண்ட ஆற்றல் கலவையின் (Primordial soup) வெட்பம் 25 கோடி பாரனைட் ஆக இருந்தபோது அது வெடித்துச் சிதறி சூரிய குடும்பங்கள், விண்மீன்கள் தோன்றின. அவை உயிரற்ற, அறிவற்ற திடப்பொருள் (matter) என்கிறது அறிவியல்.

ஒன்றும் இல்லாமை இல் (சூனியம்) இருந்து தோன்றுவதுதான் படைப்பு! என்றும் உள்ள பொருள் அல்லது சக்தி திரிபாக்கம் ஆவதுதான் உருமலர்ச்சி (பரிணாமம்)!

பரம்பொருளின் எண்ணத்தில் அண்டம் படைக்கப்பட்டது என ஆன்மீகம் கூறுவதும் அண்டம் வெடித்துச் சிதறி சூரிய குடும்பங்கள், விண்மீன்கள் தோன்றின என அறிவியல் கூறுவதும் எப்படி ஒன்றாகும்?

எனவே உயிரும் அறிவும் அற்ற அண்டமும் உயிரும் அறிவும் ஆனந்த குணமும் (சத்சித் ஆனந்தம்) உடைய பரம்பொருளும் ஒன்றாக முடியாது.

மேலும் ~சந்திரக் கதிர்களும் சூரியக் கதிர்களும் உயிரின இயல்புகளில் தாக்கம் செலுத்துகிறது என்கிறது அறிவியல்........கிரகங்களின் கதிர்களுக்கும் மனித வாழ்வுக்கும நெருங்கி தொர்பு இருக்கிறது என்று தீர்மானிக்கலாம். இதைத்தானே சாதகக்கணிதம் கூறுகிறது? கிரகங்கள், சூரியன் இவற்றின் கதிர் வீச்சு உயிரினங்களின் உடல்களில் தாக்கம் உண்டாக்கும். சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட நமக்கு அருகில் இருப்பவை. எனவே, மற்ற நட்சத்திரக் குடும்பக் கதிர்களின் ஆதிக்கத்தை விட, நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களின் கதிர்களின் ஆதிக்கம் நம்மீது அதிக அளவில் இருக்கும்’ என்கிறார் கட்டுரையாளர்.

சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களின் கதிர்வீச்சின் தாக்கம் மனிதர்களின் பிறந்த நாள் நேரம் இவற்றின் அடிப்படையில் இருக்க முடியாது என அறிவியல் சொல்கிறது. எந்தத் தாக்கமும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

~ஒரு குழந்தை பிறக்கு போது, கிரகநிலை அமைப்புகள் எந்த வகையில் இணைந்துள்ளதோ அந்தக் கணக்குதான் ஜாதகமாகக் குறிப்பிடப்படுறது| என்கிறார் தினமலர் கட்டுரையாளர்.

பன்னிரண்டு இராசி மண்டலங்கள் சோதிடர்களால் விதிக் கட்டுப்பாடின்றி வகுக்கப்பட்டது. அதே போல் 12 வீடுகளும் வெறும் வான வெளியைப் பிரித்துக் கூறுவதுதான். இந்தப் 12 வீடுகளும் சாதகனது தலை முதல் கால் வரை உள்ள உறுப்புக்களைக் குறிக்கிறது என்பதும் கற்பனையே!

இராசி வீடுகளில் கிரகங்கள் சஞ்சரிப்பது என்பது வெறும் புலக் காட்சியே. இராசி மண்டலத்துக்கும் கோள்களுக்கும் இடையில் கோடான கோடி கிமீ தூர இடைவெளி இருக்கின்றன.

இந்த இராசிகள், வீடுகள், கோள்கள் இவற்றுக்கு கற்பிக்கப்படும் பலன்கள் எந்தவித விதிக்கட்டுப்பாடும் இன்றி சொல்லப்படும் புனைந்துரையே!

இதில் குழந்தை பிறந்த நாள் நேரம் இவற்றோடு கோள்களையும் இராசிகளையும் வீடுகளையும் தொடர்பு படுத்துவது வெறும் காட்சி அளவில் செய்யப்படுவதே.

வானிலுள்ள கோள்கள் இராசிகள் எல்லோர்க்கும் பொதுவானது. சோதிடம் சொல்வது போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அமைப்பு இல்லை.

இராசிகள், வீடுகள், கோள்கள் இவற்றைவிட மனிதர்கள் வாழும் சூழல் (நிலம், நீர், தட்பவெடப்பம், சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு முதலியன) கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே சோதிடத்துக்கும் அறிவியலுக்கும் முடிச்சுப் போடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வீண் வேலையாகும். இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாத இரு சமாந்திர கோடு;கள்!

மேலும் அவர் எழுதுகிறார் ~ஒரு குறிப்பிட்ட வகையில் கிரகங்கள் இணைந்துள்ள போது அவற்றின் மொத்தக் கதிர்வீச்சு அளவு ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும். எனவே அந்தக் கதிர் வீச்சு அளவின் ஆதிக்கம் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஆதிக்கத்தைச் செலுத்தும்.|

இந்த ~ஆதிக்கம்| பற்றி முன்னரே விரிவாக புள்ளி விபரத்தோடு எழுதியுள்ளேன்.

பூமிக்கும் கோள்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை கணக்கில் எடுத்தால் இந்த ஆதிக்கம் ஒரு கற்பனை என்பது தெரியவரும்.

பூமியில் இருந்து கோள்களின் (ஞாயிறு கோள் அல்ல) சராசரி கிமீ தூரம் -

சனி - 142.4 கோடி

வியாழன் - 77.8 கோடி

செவ்வாய் - 7.83 கோடி

ஞாயிறு - 14.96 கோடி

வெள்ளி - 4.14 கோடி

புதன் - 9.17 கோடி

சந்திரன் - 384,487 இலட்சம்

இவ்வளவு தொலைவில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு ஒன்று சேர்ந்து பூமியில் ஒரு நாட்டில், ஒரு ஊரில், ஒரு வீட்டில், ஓர் அறையில், நான்கு சுவர்களுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட நாளில் நேரத்தில் பிறந்த குழந்தையின் மீது வீசுமா? தாக்குமா? அதனால் குழந்தை பாதிக்கப்படுமா? அறிவியல் இல்லை என்கிறது.

அப்படியே அந்தக் கதிர்வீச்சு தாக்குவதற்கும் அந்தக் குழந்தையின் உடல்நலம், வளர்ச்சி, நுண்ணறிவு, கல்வி, வேலைவாய்ப்பு, வயது, ஆளுமை, வறுமை, செல்வம், கணவன்-மனைவி உறவு, மணவிலக்கு, கடன்தொல்லை, மலட்டுத்தன்மை, தேர்தலில் வெற்றி தோல்வி, மாமியார் மருமகள் சண்டை போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?

ஒரு தனி மனிதனின் வாழ்வியல் கூறுகள், அவனின் பண்பு நலன்கள், கேடுகள் இவற்றுக்கு அவனது மரபியலும் (genetics) சூழ்நிலையும் (environment) காரணிகள் என்பதே உளவியல் சமூக இயல் ஆய்வுகளின் முடிவாகும்!

இறுதியாக கட்டுரையாளர் ~ஜாதகத்தில் இருக்கும் கிரக இணைப்புச் சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புக்களை சில பரிகாரங்களால் (கிரகக் கதிர் வீச்சு அளவுகளை மாற்றும் முறை) சரி செய்யலாம் என்கிறது இந்து ஆன்மீகம். மரபணுக்களில் இருக்கும் சில அம்சங்களை நீக்கியும் சில அம்சங்களைப் புதிதாகச் சேர்த்தும் சரி செய்யலாம் என்கிறது நவீன அறிவியல்.|

சனி தோசம் செவ்வாய் தோசம் உள்ள ஒருவன் எள்ளெண்ணெய் எரித்தல், நவக்கிரகங்களை சுற்றி வருதல், அர்ச்சனை செய்தல், அபிசேகம் செய்தல், காகத்துக்குப் படைத்தல் முதலான கிரக சாந்தி பரிகாரம் செய்தால் அந்தக் கோள்களின் கதிர் வீச்சு அளவுகளை மாற்றி விட முடியுமா? இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்க முடியுமா?

மரபணுப் பொறியியல் (genetical engineering ) ஆகிய அறிவியலும் சோதிடம் என்ற மூடநம்பிக்கையும் சரி சமமாக முடியாது. மரபணு வெட்டு ஒட்டு முறை நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. கிரக பரிகார தோசத்தையும் மரபணுப் பொறியியலையும் ஒன்றென்பது கோமாளித்தனமானது.

~சாதகம் என்பது கட்டுக்கதை அல்ல. அறிவியல் மதமான இந்து மதத்தின் அற்புதமான வாழ்க்கை வழிகாட்டி என்று எழுதுவது இப்போது இந்து சமயத்துக்கு உள்ள கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்விடும்!|

இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது. இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்து மதத்தில் மட்டுமல்ல வேறு எந்த மதத்திலும் அறிவியல் கிடையாது. கடவுள் ஆறு நாள்களில் அண்டத்தையும் உலகத்தையும் உயிரினங்களையும் படைத்து ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது கட்டுக் கதை. அது போலவே ஆதாமை மண்ணில் இருந்து (உடல் மட்டும்) படைத்து அவன் தூங்கும்போது அவனது விலா எலும்பை எடுத்து ஏவாளைப் படைத்தார் என்பதும் கட்டுக் கதையே!

மதங்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. கடவுள், படைப்பு, ஆன்மா, நரகம், சொர்க்கம், பாவம் புண்ணியம், தலைவிதி, ஊழ்வினை எல்லாம் மூடநம்பிக்கையே!

தீமித்தல், செடில் காவடி பறவைக் காவடி எடுத்தல், அலகு குத்துதல், வேப்பிலை அடித்தல் போன்றவை மூடநம்பிக்கையே!

சோதிடம் புரட்டு, பொய், பித்தலாட்டம் என பகுத்தறிவாளர்கள் மட்டும் அல்ல நோபெல் பசிசு பெற்ற உலகத்தின் தலைசிறந்த அறிவியலாளர்களும் அதையேதான் சொல்கிறார்கள். அதனை அடுத்த கிழமை பார்ப்போம்.
http://www.tamilnatham.com/astro/astrology20040907.htm
Reply


Messages In This Thread
[No subject] - by Sriramanan - 05-26-2005, 09:12 AM
[No subject] - by hari - 05-26-2005, 09:54 AM
[No subject] - by Magaathma - 05-26-2005, 09:20 PM
[No subject] - by Sriramanan - 05-27-2005, 01:09 AM
[No subject] - by sOliyAn - 05-27-2005, 02:24 AM
[No subject] - by hari - 05-27-2005, 06:05 AM
[No subject] - by hari - 05-27-2005, 06:22 AM
[No subject] - by sOliyAn - 05-27-2005, 07:58 AM
[No subject] - by hari - 05-27-2005, 08:07 AM
[No subject] - by hari - 05-27-2005, 08:16 AM
[No subject] - by Sriramanan - 05-27-2005, 10:18 AM
[No subject] - by hari - 05-27-2005, 10:28 AM
[No subject] - by sathiri - 05-27-2005, 05:59 PM
[No subject] - by hari - 05-27-2005, 06:13 PM
[No subject] - by வெண்ணிலா - 05-27-2005, 06:31 PM
[No subject] - by hari - 05-28-2005, 09:36 AM
[No subject] - by வெண்ணிலா - 05-28-2005, 02:04 PM
[No subject] - by Magaathma - 05-29-2005, 01:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)