Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொறிவதற்கல்ல சுமப்பதற்கே உங்கள் முதுகு!
#1
சொறிவதற்கல்ல சுமப்பதற்கே உங்கள் முதுகு!

- தமிழ் மாறன்.

ஓருபுறத்தே தமிழர்கள் கனடாவில் தங்கள் கால்களை உறுதியாகப் பதித்து தமிழனின் பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்க, மற்றப்பக்கமாக எந்தவித தகுதியுமில்லாத வெறுங் குடங்கள் தங்களைப் பெரிய மேதைகளாகக்; காட்ட முனையும் மலினத்தனமான செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் இங்கே இடம்பெற்ற நிகழ்வொன்றும், அதனை மிகைப் படுத்தி வெளிவந்த பத்திரிகைச் செய்தியொன்றும் ஒரு பெரிய சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது. உலகப் பல்கலைக் கழகம் என்ற ஒரு அமைப்பின் விருதை தவறாக அர்த்தம் கற்பித்து அதற்கு இல்லாத கனதியைக் கொடுத்து தகிடு தத்தத்தை ஒரு கூட்டம் செவ்வனே செய்து அதை மற்றவர்களும் நம்பச் செய்யும் கைங்கரியத்தைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன். மேற்படி விழாவின் நாயகனையோ அல்லது அவரது சேவை பற்றிய புகழாரத்தையோ நான் இங்கே விமர்சிக்கவில்லை. அவர் ஒரு மரியாதைக்குரிய ஆசான். தன் சொந்த முயற்சியால் உயர்ந்த ஒரு தமிழ்ப் பண்டிதர். ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் இருந்துகொண்டே வெளிவாரிப் பட்டப்படிப்புப் படித்து பட்டம் கூடப் பெற்றவர். அப்பாவியான சிரிப்போடு எப்போதும் வளையவரும் அந்த கல்விமானை எந்தவிதத்திலும் விமர்சனத்திற்கு உட்படுத்த நான் விரும்பவில்லை.

ஆனாலும் அந்த அப்பாவி மனிதனை சில புறம்போக்குகள் இப்போது தேவையில்லாத சிக்கலுக்;குள் மாட்டி விட்டுள்ளார்கள். போலிக்கௌரவம் எள்ளளவும் தேவையில்லாத அந்தப் பண்டிதர் ஒரு பசு. இப்போது பன்றியோடு சேர்ந்த பசு என்ற நிலை அவருக்கு ஏற்பட்டு, அவரையும் போலிக்கௌரவம் என்ற விசச்சுழலில் சிக்கவைத்துவிட்டது. போகட்டும்....

ஆனால் அந்த விழாவில் உலகப் பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் விருதைப் பற்றி சிலரால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களையே நான் இங்கே மறுதலிக்க விரும்புகிறேன்

ஏன் அந்த விருதை மேற்படி நபர்கள் இவ்வாறு சிலாகித்தார்கள் என்றால், அவர்கள் அந்த விருதை அடுத்ததாகப் பெறுவதற்காக விரும்புகிறார்கள் என்று நான் சொல்லித் தான் நீங்கள் விளங்க வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எவ்வாறு புகழ்ந்தார்கள் என்பதற்கு சில புகழாரங்களை நீங்களே படியுங்கள்...

“உலக பல்கலைக்கழகம் ஒரு பெரிய அமைப்பு. அவர்கள் சேவையை, தகுதியை ஆராய்ந்தே கலாநிதிப்பட்டம் வழங்குகிறார்கள்”

“அன்னார் பெற்றார், இன்னார் பெற்றார் எனவே இவருக்கும் இந்தப் பட்டம் தகுதியுடையது.||

கழுதையில் சென்ற தந்தையினதும், மகனதும் கதைபோல இந்த கலாநிதிப் பட்டமும் பொய்யாக மறைந்து விடக்கூடாது. இப்பட்டத்திற்குரிய கனத்தை நாங்கள் கொடுக்க வேண்டும், பெறுபவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும்

சரி! இவர்களுடைய வாதத்தில் நியாயமிருக்கிறதா என்பதைப் பார்த்துவிடுவோம் என்ற ஆவலில் உலகப் பல்கலைக்கழகம் என்கிற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன்.

“வணக்கம், நான் மாறன்...” ரொறன்ரோவில் இருந்து பேசுகிறேன்

“வணக்கம்... நான் ஜில்... சொல்லுங்கள்.”

என்னவென்றால் எனது நண்பர் ஒருவர் உயர்தரக் கல்வி எதுவும் பெறாதவர். 12ம் வகுப்புடனே படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால், கதை நன்றாக எழுதுவார், பத்திரிகைகளில் பல கதைகள் எழுதியுள்ளார். அவருக்கு உங்களது கலாநிதிப் பட்டத்தை வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன்.

- ஆ... நல்லது... அவர் மனித பண்புகள் (humanism) அடிப்படையில் எமது விருதிற்குத் தகுதி பெறுகிறார். எனினும் நீங்கள் அவருக்காக விண்ணப்பிக்காது அவராக விண்ணப்பித்தால் நல்லது.

ஏன் நானல்லவா இந்த விருதை அவருக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்?.

- நல்லது. ஆனால் நாங்கள் இந்த விருதிற்கான பணத்துடன் இந்த விடயம் நிற்பதை விரும்பவில்லை, அதன் பிறகும் நன்கொடைகள் மற்றும் அங்கத்துவம் (வருடமொன்றிற்கு 75 டொலர்கள்) எனப் பல விடயங்கள் உண்டு. எனவே அவரே அதற்கு விண்ணப்பிப்பது நல்லது. வேண்டுமென்றால் விண்ணப்பத்தினை உங்களுக்கு அனுப்புகிறேன். அவரிடம் அதைச் சேர்ப்பித்து விடுங்கள்.

சரி.. எனக்கு ஒரு சிறிய சந்தேகம்... இது கலாநிதிப் பட்டம் தானே?

- நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டது நல்லது. நாங்கள் கொடுப்பது ஒரு விருது (Award) இதற்கு ஒரு கல்விசார் பெறுமதியுமில்லை (non academicals). இந்த விருதின் மூலம் அவர்களை எங்களது உறுப்பினர்களாக்குகிறோம்.

என்ன உங்கள் விருதுக்கு கல்விசார் பெறுமதியில்லையா? இங்கே உங்கள் விருதைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று போடுகிறார்களே? மேடைகளில் கூட அடுத்ததாக கலாநிதி ...... பேசுவார் என்று கூறுகிறார்களே?

- அது மிகவும் தவறான ஒரு செயல்

(it is entirely wrong). நாங்கள் எப்போதுமே கலாநிதிப் பட்டம் வழங்குவதில்லை. நாங்கள் கொடுப்பது கலாச்சாரக் கலாநிதி விருது (Cultural Doctorate Award). இதன் நோக்கம் அவர்களை எங்களது அங்கத்துவர்களாக்குவதே.

அப்படியானால் கனடாவில் இதைத் பலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.?

- நாங்களும் கேள்விப்பட்டோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் போதே நாங்கள் இது ஒரு விருதே. இதற்கு எந்தவித ஒரு அங்கீகாரமோ, கல்வித் தகுதியோ இல்லை என்பதை மிகவும் தெளிவுபடுத்துகிறோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரிய வந்துள்ளது.

நன்றி... ஜில்! பிறகொரு சந்தர்ப்பத்தில் தொடர்பு கொள்கிறேன்.

- சரி, நல்லது. உங்களது முகவரியைத் தாருங்கள்.. விண்ணப்பத்தை அனுப்புகிறேன்... நண்பரிடம் கொடுத்து விடுங்கள். இல்லையில்லை... அதனை இப்போதைக்கு விட்டு விடுவோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு விருதை எனது நண்பர் ஏற்பாரோ தெரியாது... அவரை முதலில் கேட்டுவிட்டு பிற்பாடு முகவரியைத் தருகிறேன்.

நல்லது. உங்களுக்கு இந்த இரவு இனியதாக இருக்கட்டும்!

- உங்களுக்கும்தான் தான் ஜில். நன்றி.

மேற்படி விருதுக்;காக இந்த இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகக்குறைந்தது 275 அமெரிக்க டொலர்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் (அவரவர் வசதி வாய்ப்பிற்கு ஏற்ப கூட்டிக் கொடுக்கலாம்). அவர்களது அமைப்பின் அங்கத்துவர்களாக்கு வதையே குறியாகக் கொண்டு இந்த விருதைக் கொடுக்கிறார்கள். எனவே வருடாந்த அங்கத்துவம் மூலம் கிடைக்கும் பணம் என அந்த நிறுவனம் இவர்களிடமிருந்து நிறையவே பணம் பார்க்கிறது.

உங்களுக்கு என்ன புரிகிறதோ இல்லையோ, எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

நன்றி: முழக்கம் (http://www.muzhakkam.com/special/special04.htm)

கலாநிதி சாமி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ம் நன்றாகத்தான் இருக்கின்றது. 75 டெலருடன் கனடா போகத்தான் வேண்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
சொறிவதற்கல்ல சுமப்பத - by சாமி - 09-23-2003, 08:53 PM
[No subject] - by sOliyAn - 09-23-2003, 11:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)