Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தென்னிலங்கையில் மினி சூறாவளி
#1
தென்னிலங்கையில் மினி சூறாவளி

தென் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மினி சூறாவளி வீசியுள்ளதுடன் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன.

நாட்டில் பரவலாக பெய்து வரும் கடும் மழை மற்றும் தாழமுக்கம் காரணமாகவே சில இடங்களில் இந்த நிலமை தோன்றியுள்ளது

இதேவேளை கடல் அலைகளின் வேகமும் வழமைக்கு மாறாக காணப்பட்டுள்ளது.

கடலை அண்மித்த பிரதேசங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படும் சாத்தியம் தென்படுவதாகவும் எனினும், பாரிய பாதிப்புகள் எதுவும் இடம்பெறமாட்டாது என்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டாரகம பிரதேசத்தில் மட்டும் மினி சூறாவளி காரணமாக 15 க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் நேற்று காலை சேதமடைந்துள்ளன.

இதேவேளை இப் பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகளும் சீர் குலைந்திருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் காலநிலை இன்னும் ஒரு வாரம் நீடிக்கலாம் என்றும் அதுவரை இடி மின்னலுடன் கூடிய மழை பரவலாக பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி அஜித் வீரவர்தன தெரிவித்தார்.
நன்றி: தினக்குரல்
Reply


Messages In This Thread
தென்னிலங்கையில் மினி சூறாவளி - by hari - 05-26-2005, 07:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)