09-23-2003, 04:13 PM
mohamed Wrote:ஆகா ஆகா, கதை அப்படிப் போகுதோ, வானொலி வராமல் தடுப்பது அல்ல நம் வேலை, அது மக்களை ஏமாத்தி சுத்துமாத்து செய்பவர்கள் கையில் போக கூடாது. அப்படி நடந்தால் ஐரோப்பாவின் வரட்டு ஜனநாயகம் கூட முற்று முழுதாக சொத்து விடும். ஐரோப்பிவில் உள்ள மக்கள் வாக்களித்து தான் எல்லாம் நடக்குது ஆனால் ஐரோப்பாவில் மொத்த சனத் தொகையில் 48க்கும் குறைவான மக்களே தேர்தலில் அக்கறை கொண்டுள்ளார்கள். இது அமரிக்காவில் 45வீதமாக குறைந்துள்ளது. ஆக அமைக்கும் அரசில் மக்களின் முழுமையான பிரதிநிதித்துவம் கூட இல்லாத இந்த ஜனநாயகம் உங்களுக்க பெரிசாக தெரிகையில் மற்றைய விடயம் எப்படீ புரியும். இன்னுமொரு விடயம், ஆகஸ்ட் மாதம் வெளிவந்த வீரகேசரி தினசரி பத்திரிகைகைளi ஒரு தரம் முடிந்தால் வரவைளத்து பார்க்கவும் (22.08.03 - 29.08.03) புலிகள் மக்களிடம் மண்மீட்பு நிதிக்காக வாங்கிய கடனை மக்களிடம் திருப்பி கொடுக்கும் பட்டியல் தொடரந்து வந்தது. அவர்களிடம் ஆயதம் உள்ள போதும் அடாவடித்தனம் செய்யதாது வாங்கிய கடனை திருப்பி கொடுக்கிறராகள். ஆதைப்பார்தாவது புலம் பெயர்ந்ததுகள் திருந்தினால் சரி. வெறுமனே குருட்டுத்தனமாக புலிகளை விமர்சனம் செய்யும் உங்களுக்கு இது புரிய நியாயம் இல்லை தானேவாக்களிப்பவர் எத்தனை வீதமானாலும் தேர்ந்தெடுப்பது மக்கள். வாக்குப்போடாமல் விடுவதுகூட அவர்களது சுதந்திரத்தை சுட்டிக்காட்டுகிறது. எவரும் எவரையும் வற்புறுத்தி வாக்குப்போடச்சொல்லவில்லை என்பதற்கான அத்தாட்சி.
பட்டியலில் வருவதெல்லாம் உண்மையென நம்பினால் நான் வாழ்ந்ததன் அர்த்தம் இல்லாமல்ப்போவிடும். யாரோ பகிரங்கமாக ஆதரவுதேடும் பிரச்சாரம் என்று சொல்லுங்கள் நம்புகிறேன். நான் ஏனைய பத்திரிகைகளையும் படிப்பவன் ஆகையால் பகுத்தறிவு கூட.. அத்தனையும் பறிகொடுத்துவந்தவர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். அதை விடுவோம்..
ஆயுதம்கொண்டு வற்புறுத்தி 100 வீதம் வாக்குப்பெறுவது உங்களுக்கு ஜனநாயகமாகப்படலாம். ஆனால் எனக்கு அதுவல்ல. விருப்பமானவனுக்கு வாக்குப்போடுவதுதான் ஜனநாயகம்.
மேலும் உங்கள் சுத்துமாத்துக்கருத்துக்கு ஏற்கெனவே பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது போய்ப்பாருங்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

