05-24-2005, 06:11 PM
tamilini Wrote:அப்படியா.. குட்டிப்பு}னை.. பாத்தியளா.. நாங்க கற்பனை பண்ணி எழுதியிருந்தாலும்.. அது உங்களை.. இந்த அளவிற்கு எண்ண வைச்சிருக்குது அது வரை மகிழ்ச்சி ஆனால்.. ஒரு அனுபவம் எங்களுக்கு கிடைக்கவேணும் என்றால்... அது நடைமுறையில நமக்கு நடந்திருக்கணும் என்றில்லை.. மற்றவைக்கு நடக்கிறதை பாத்தும் அறிஞ்சுக்கலாம். அப்படித்தான் இதுவும். மற்றவை காதலிக்கினம்.. படுற பாட்டை பாக்கிறம். அதை எழுதினம். இதேமாதிரி காதல் தோல்வி தற்கொலை பண்ணினம். கஸ்டப்படினம். அதையும் பாக்கிறம். மற்றவையின் அனுபவங்கள் எங்களுக்கும் பாடங்கள். அவ்வளவும் தான். இதில யாரையும் பாதிக்கிறதற்காய் எழுதல.. இப்ப உங்களைப்;பாதிச்சிட்டோ என்று.. எண்ண வைக்குது.. கவிதைக்கு பொய் அவசியம் எல்லா..?? மற்றவையின் அனுபவங்களுடன். பொய் கலந்து எழுதினம்.. அவ்வளவும் தான். வேறு விதமாய் எழுதிய கவிதைகளும் களத்தில இருக்கே.. படிச்சுப்பாருங்க.. :wink: :mrgreen:
காதலிற்கு.. இப்படி ஒரு ரசிகையா.. காதலிச்சவை தான் கவிதை எழுதனுமா..?? காதல் தோல்வி என்றால் தான் எழுதனுமா..?? விதிகள் இல்லைத்தானே..??:?:
அக்கா நீங்கள் தானே எழுதியிருக்கிறீங்கள்? கற்பனையெண்டும் உண்மையான கதையெண்டும் எதுக்கு போடவேணுமக்கா? ரண்டையும் போடத்தேவையில்ல.
சுனாமிய நீங்கள் நேரடிய அனுபவிக்கல அக்கா அத நீங்கள் பார்த்துட்டு கேட்டுட்டு அத எழுதுறீங்கள். ஏன் எழுதுறீங்க? உங்கள பாதிச்ச படியால் தானே? பாதிச்சத எழுதேக்க அந்த பாதிப்புதான் கவிதையா வரும்? அந்தப் பாதிப்பு எண்டுறது கற்பனைல வந்த பாதிப்பில்லத்தானேயக்கா? அது உண்மையான பாதிப்பு தானே? உண்மையாக ஏற்பட்ட பாதிப்ப எதுக்கு கற்பனையெண்டு சொல்லோணும்? கவிதையெண்டுறதே பாதிப்பின்ர வெளிப்பாடுதானேயக்கா? பொய்யாக நீங்களே உங்களுக்குள்ள ஒரு பாதிப்ப ஏற்படுத்தி எழுதிறீங்களா அப்ப? பாதிப்பு எண்டேக்க அது நேரடியான இழப்பாகவும் வலியாகவும் இருக்கலாம் இல்லாட்டி உணர்வு பாதிப்பா இருக்கலாம் எந்தப் பாதிப்பாயும் இருக்கலாம் மொத்தத்தில பாதிச்சதால தான் எழுதுறீங்கள். அப்பிடி பாதிப்பினால எழுதுற கவிதையை கற்பனையெண்டு நீங்கள் எழுதுறதால அந்தக்கவிதைல உயிர் இருக்காதக்கா வெறும் பிணமாகத்தானக்கா இருக்கும். action எண்டு ஒண்டு இருந்தால் reaction ம் இருக்குந்தானே அக்கா அதுக்காக ரியாக்சன் வேண்டாமெண்டு கற்பனையெண்டு போடுறது உங்களுக்கேற்பட்ட பாதிப்ப நீங்களே பொய்யாக்குற முயற்சிதானேயக்கா?


:?: