05-24-2005, 04:18 PM
தோல்வி வருமெண்டு தெரியுமக்கா அதுக்காக அதை கற்பனை செய்து கவிதை எழுதிறதில என்ன பிரயோசனம்? அணுவாயுதத்த கற்பனை செய்தவர் தன்ர நன்மைக்காகத் தானே செய்தார். அதில மற்றாக்களுக்கு பாதிப்பெண்டாலும் தன்ர நன்மைக்காக செய்தார். பாதிப்பில்லாத கற்பனைதானக்கா எனக்கு அது விளங்குது ஆனா நீங்கள் காதலிக்காமல் அதின்ர சோகத்த மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறது எனக்கு என்னவோ விளங்கல. அதுக்காக காதலிச்சவ தான் கவிதை எழுதோணுமெண்டு நான் சொல்லலயக்கா. நீங்கள் செத்துவிட்டதா எழுதுங்கோ கற்பிழந்துவிட்டதாய் கவிதை எழுதுங்கோ அதில தப்பில்ல ஆனால் நீங்கள் தானே திரும்ப திரும்ப தனிய காதல் தோல்விபற்றி மட்டும் எழுதினிங்கள் அதுக்கு தான் சொன்னன். சரி நீங்க செத்துவிட்டதாய் எழுதுங்க எப்பிடி இருக்கெண்டு பார்ப்பம் உங்கட கற்பனையக்கா எனக்கு நான் செத்தால் என்னமாதிரி இருக்குமெண்டு ஆசை எழுதத் தெரியாதே நீங்களாவது எழுதுங்கள்

