09-23-2003, 12:29 PM
ஏன்ராப்பா மொஹமது காசு குடுத்தேன் ஏமாந்தேன் என யாரும் சொல்லலாம். கொடுத்தார்களோ இல்லையோ என்பதற்கு சாட்சியங்கள் இருக்கின்றனவோ என்னவோ தெரியாது.. இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவல்ல திரும்பக் கேட்குமிடம். அது அதற்கென்று கொடுத்ததை திரும்ப வாங்குவதற்கான சட்டபூர்வமான அணுகுமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றுவதே முறை. மேலும் அட்சய பாத்திரத்தையும் களவெடுத்துவிட்டார்களா..? நீங்கள் கூறுவதுபோல கொடுக்க எடுக்கக்கூடியதாகவிருந்த பாத்திரம் தற்போது திடீரென இல்லாமல் போனதன் மர்மம் என்ன..? சூரிய அறிவிப்பாளர் இருக்கும்வரை சிரித்துக் கதைத்து காசுகொடுத்தோர் தற்போது அழுதழுது கேட்பதன் மர்மம்தான் என்ன..? அவர்கொடுத்தார் இவர்கொடுத்தார் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை இவருக்கு கொடுக்கப்படவில்லையென்று சொல்கின்றீர்களேயன்றி கொடுத்தவனையோ வேலைசெய்தவனையோ காணவில்லை. வானொலி வருகுதோ இல்லையோ.. சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்வர்களுடன் நேரடியாக கதைப்பதே மேல். இல்லையேல் முறைப்படி சட்டத்தை நாடுவதே மேல். வானொலியை வரவிடுவதா இல்லையா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டுமே. நான் ஏமாந்தேன் நான் ஏமாந்தேன் என குரல் வருகிறதேதவிர ஏமாந்தவனை அவன் உருவத்தை காணவில்லை. தனிப்பட்ட விருப்புவெறுப்பு கொட்டித்தீர்க்க இது களமல்ல. நாங்கள் வாழும் ஜனநாயக நாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்படும்வரை நிரபராதி. இவ்வளவு பிரச்சாரம் இணையத்தளங்கள் வானலைகளில் நடந்தும் வானொலி வருமாயின் பிரச்சனை வானொலியிலில்லை. பிரச்சாரம் செய்பவர்களிலேயே. நன்றி வணக்கம்.
Truth 'll prevail

