Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலே நிம்மதி
#39
ஆதலினால் காதல் செய்வீர்

<img src='http://www.poems4tamils.com/gallery//data/media/22/rose1.gif' border='0' alt='user posted image'>

காதலிப்பது மாபெரும் குற்றமாக இன்னமும் கருதப்படுகிறது. 15 அல்லது 16 வயதில் இனக்கவர்ச்சி கொண்டு அதை காதல் என்று குழப்புவர்கள் ஒரு பக்கம் என்றால், கால் பதித்து நிற்கும் முன்னே எதையும் யோசிக்காமல் திடீரென வீட்டை விட்டு வெளியேறி உதை பட்ட பந்தாக திரும்பி வாழ்வை கெடுத்துக் கொள்ளும் இளையோர்கள் ஒரு பக்கம். இதனாலோ என்னவோ காதலித்தலே மிக பெரிய குற்றமாக பலரும் கூறி, எழுதி வருகின்றனர். கலி முத்திடுத்து, சினிமா பார்த்து பொண்கள் எல்லாம் அலையறதுகள் என்று சொல்வதை நானே கேட்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை மன முதிர்ச்சி அடைந்த இருவர் மனமொப்பி திருமணம் செய்து கொண்டால் வன்முறை, வரதட்சணை போன்ற குறைகள் நீங்க வாய்ப்பு இருக்கும்.

தன்னுடைய பிள்ளைக்கு தான் பெண் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பும் அன்னையருக்கு அந்த பிள்ளையின் விருப்பம் ஆசைகள் , பழக்கங்கள் போன்றவை மாறியிருக்கும் என்பது ஏனோ தோன்றுவதில்லை. காதலித்தவளை கை பிடித்து விட்டால் காலம் காலம் அதுவே குறையாக மனதில் இருக்கிறது.
தான் பார்த்த பிள்ளை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, பெண் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவர்கள் தங்கள் முடிவை பிள்ளைகளிடம் திணிக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று பயமுறுத்தலும் தொடர, உடனே அடிபணியும் பிள்ளைகள் விருப்பமில்லா திருமணத்தில் வாழ்நாள் முழுதும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வேறுபாடு வந்து பிரிவதென்று முடிவெடுத்து விடாலும் உடனே விஷயம் தெரியாமல் சமரசம் செய்வதும் உண்டு. சின்ன சின்ன சண்டைகள் வரும் போது சமரசம் செய்தால் பரவாயில்லை, அது குடும்பம் என்ற கூட்டில் குஞ்சுகள் நிம்மதியாக வாழ வழி வகுக்கும். ஆனால் பாலியல் வக்கிரங்கள், வன்முறை போன்றவற்றை வாய்விட்டு சொல்லவும் கூச்சப்பட்டுக்கொண்டு தற்கொலையில் முடிகின்ற பெண்கள் ஏராளம். பாலியல் வக்கிரங்கள் பெற்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனாலும் நிறைய பெற்றோர்கள் தங்களை விட வேறு யாரும் தங்கள் பிள்ளையை புரிந்து கொள்ள முடியாது என்று தவறான நினைப்பில் வாழ்கிறார்கள். என்னுடைய தோழி பலமுறை தன் கணவனின் பெற்றோரிடம் பேச முயன்று தோற்று போனாள். அவளுடைய பெற்றோரும் அ வ ளின் குறைகளை புரிந்து கொள்ளவில்லை, சந்தேக குணத்தாலும் வக்கிர ஆசையாலும் தினம் தினம் அவதி பட்டு உடைந்தே போனாள் போன வருடம் தீயிட்டு கொள்ளும் வரை.

சமீபத்தில் குமுதம் ஜோதிடம் இதழை புரட்டி கொண்டிருந்தேன். அதில் ஒரு தந்தை புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் விட்டு கடிதம் எழுதியிருந்தாராம். ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்த பெண், நன்கு படித்தவள். உடன் பணி செய்யும் ஒருவரை காதலிக்க வேற்று சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ய மறுத்து அந்த பெண்ணை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்து விட்டார்களாம்.பெண்ணின் மனத்தை மாற்ற பரிகாரம் கேட்டு வரம் ஒரு மடலாவது வருகிறது. பலர் சொல்லியும் கேட்காமல் இருந்த பெண் ராமானுஜரை சன்னிதியில் கொண்டு தள்ளிய ஒரு வினாடியில் மனம் மாறி பெற்றோர் பார்த்திருந்தவரையே மணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லிவிட்டாளாம். உண்மையிலேயே அந்த ஆணின் அன்பு உண்மையாய் இருந்தால் என்ன பாடுபடுவார் என்பதை ஏன் சிந்திப்பதில்லை? காதலித்து திருமணம் செய்து கொண்டோர் எல்லாரும் கஷ்டப்படுவதும் இல்லை, பெற்றோர் செய்து வைத்த திருமணங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இருப்பதும் இல்லை.திருமணம் செய்ய நினைக்கும் முன்னே இத்தனை பிரச்சினைகள் என்றால், அதன் பின் சங்கிலித்தொடராய் எத்தனை வருகிறது

நன்றி - வெங்கட்
Reply


Messages In This Thread
காதலே நிம்மதி - by Mathan - 02-14-2005, 02:49 AM
[No subject] - by Nanthaa - 02-15-2005, 12:43 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 01:36 PM
[No subject] - by Mathan - 02-15-2005, 01:45 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 02:04 PM
[No subject] - by Mathan - 02-15-2005, 02:06 PM
[No subject] - by Mathan - 02-15-2005, 02:07 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 02:07 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 02:56 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 03:00 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 03:07 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 03:09 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 03:14 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 03:19 PM
[No subject] - by shiyam - 02-15-2005, 05:00 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 05:03 PM
[No subject] - by shiyam - 02-15-2005, 05:14 PM
[No subject] - by KULAKADDAN - 02-15-2005, 07:55 PM
[No subject] - by tamilini - 02-15-2005, 09:18 PM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 12:05 AM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 12:08 AM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 12:09 AM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 12:10 AM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 12:12 AM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 12:13 AM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 12:16 AM
[No subject] - by aswini2005 - 02-16-2005, 02:00 AM
[No subject] - by shiyam - 02-16-2005, 02:09 AM
[No subject] - by Malalai - 02-16-2005, 09:55 PM
[No subject] - by Niththila - 02-17-2005, 12:12 AM
[No subject] - by Malalai - 02-17-2005, 12:34 AM
[No subject] - by Niththila - 02-17-2005, 12:36 AM
[No subject] - by Malalai - 02-17-2005, 12:50 AM
[No subject] - by Niththila - 02-17-2005, 01:07 AM
[No subject] - by sinnappu - 02-17-2005, 11:25 PM
[No subject] - by Kurumpan - 02-17-2005, 11:30 PM
[No subject] - by sinnappu - 02-18-2005, 07:23 PM
[No subject] - by Mathan - 05-24-2005, 02:10 PM
[No subject] - by வெண்ணிலா - 05-24-2005, 02:17 PM
[No subject] - by shobana - 05-25-2005, 12:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)