Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடாநாட்டில் படையினர் நடத்தும் வெசாக் நிகழ்வில் தமிழர் .....
#1
குடாநாட்டில் படையினர் நடத்தும் வெசாக் நிகழ்வில் தமிழர் பங்கேற்பது அரசுக்குத் துணைபோவதாக அமையும்

அதனைப் புறக்கணிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் படையினர் நடத்தும் வெசாக் கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள் கலந்துகொள்வது தமிழர்கள் அரசுடனும் படையினரு டனும் நெருக்கமாக உள்ளனர் என்ற தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை செய்வதாகவே அமையும். அதற்குத் தமிழ் உறவுகள் துணை போகவேண்டாம்.
- இவ்வாறு குடாநாட்டு மக்களுக்கு பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாகத் தமிழ்த்தேசிய விழிப்புணர்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
யாழ்ப்பாண விளையாட்டரங்கில் வெசாக் பண்டிகை யைக் கொண்டாட படையினர் ஒழுங்குகள் செய்துள்ளனர். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சாந்த சொரூபியான புத்தபெருமான் பரிநிர்வாணம் பெற்ற நாளை சமூகää சமய பேதங்களைக் கடந்து எந்த வேறுபாடுமற்று சகோதர ஐக்கியத்துடன் யாழ்ப்பாணத்தில் அரச படையினர் கொண் டாடுகின்றனர் என்ற ஒரு தோற்றத்தை இது ஏற்படுத்தும்.
நேற்றுவரை கொன்றதும்ää வல்லுறவில் வதைத்ததும்ää செம்மணியில் புதைத்ததும்ää சிறையிட்டு சித் திரவதை செய்ததும் கடந்த காலங்களுடன் கழிய இன்று அரசும் படையினரும் தமிழ் மக்களை அணைத்துக்கொள்வதாகவும் அதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதாகவும் பொருள் படுத்தும்.
ஆனால்ää இன்று நிலைமை என்ன?
கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கும் திருவடிநிலையில் தகனக்கிரியை செய்வதற் கும் படையினரின் அனுமதி தேவைப்படுகின் றது. பாலையூற்று தேவாலயத்தையும் கச்ச தீவு அந்தோனியாரையும் தரிசிக்கப் படையி னரின் ரட்சிப்புத் தேவைப்படுகின்றது. மாவிட்ட புரம் கந்தசாமியையும் கீரிமலை நகுலேஸ்வர ரையும் வழிபட படையினர் வழிபடும் நேரத் தைப் பார்த்திருக்கவேண்டியிருக்கின்றது. ஆனால்ää ஒரே நாளில் திருகோணமலை சமா தான நகரத்தில் புத்தபிரான் எழுந்தருளி இடம் பெயர மறுத்து நின்கின்றார். இதனைப் பெரும் பான்மைச் சமூகத்தின் மேலாண்மை என்ப தைத் தவிர வேறு எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?
இந்நிலையில் தமிழ்மக்கள் இவ்விழாக் களில் கலந்துகொள்வதானது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இப்பண்டிகையின் மூலம் அதன் வீடியோப் படப்பிடிப்பின் மூலம் "தமிழ் மக்கள் அரசுடனும் படையினருடனும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்' என்ற தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்தமுயலும் அரசின் முயற்சி களுக்குத் துணைபோவதாக அமையும்.
தமிழ் மக்கள்ää புத்தபிரானின் அகிம்சை நெறிகளுக்கோ அந்நெறிகளை உண்மையா கவே ஏற்றுக்கொண்ட சிங்கள மக்கள் கொண் டாடும் வெசாக் பண்டிகைக்கோ ஒரு போதும் எதிரானவர்கள் அல்ல.
ஆனால்ää அரசு காலங்காலமாக பௌத்த மதத்தின் பெயராலேயே சிறுபான்மை இனங் களின் மீதும்ää மதங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி வந்துள்ளது. அதனாலேயே படையி னர் கொண்டாடும் வெசாக் பண்டிகையில் கலந்துகொள்வதன் மூலம் அரசினதும் படை யினரதும் எதிர்பார்க்கைகளுக்குத் துணைபோக வேண்டாம் என்று எம் தமிழ் உறவுகளைக் கேட்டுக்கொள்ளுகிறோம். - என்றுள்ளது.
தன்மானத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
யாழ். நகர பொது விளையாட்டு மைதா னத்தில் வொசாக் நிகழ்வுகளை பிரமாண்ட மான வகையில் காட்சிப்படுத்த படையினர் முற்பட்டுள்ளனர். அழைப்பிதழ்கள் அரச அதி காரிகளுக்கும்ää சமூக முக்கியஸ்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவை தமிழனை மதித்தல்ல. மாறாக தமி ழன் மீதான தமது மேலாதிக்கத்தை நினை வூட்டி அச்சுறுத்துவதற்கானவை. இந்தவகை வஞ்சகத்தை - கபடத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசின் பேரினவாத மேலாதிக்கம் அனைத்து லகத்தினாலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ள இன் றைய நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான இன்னுமொரு தாக்குதல் கருவியாக பௌத்த மதம் பாவிக்கப்படுவது விசனத்திற்குரியது.
""நாட்டில் இரத்த ஆறு ஓடினாலும் புத்த சிலையை அகற்றமாட்டோம்'' என கொக்கரிக் கின்றனர் பேரினவாதிகள். இதன் அர்த்தம் தமிழனின் இரத்த ஆறு ஓடவைக்கப்படும் என்ற மறைமுக பயமுறுத்தல்தான்.
எனவேää பேரினவாத்திற்கும் சாமரம் வீச எந்தத் தன்மானத் தமிழனும் முன்வரவே மாட்டான் என்பதை அரசும் படைகளும் புரிந்து கொள்ள படையினரின் வெசாக் நிகழ்வுகளைப் புறக்கணிப்போம். - என்றுள்ளது.
Tamiloosai
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
குடாநாட்டில் படையினர் நடத்தும் வெசாக் நிகழ்வில் தமிழர் ..... - by தமிழரசன் - 05-23-2005, 09:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)