Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிமை@இளமை.கொம்
#1
வணக்கம் நண்பர்களே...

என்ன தலைப்பைப் பார்த்துவிட்டு புதுசா இருக்கென்று யோசித்து உள்ளே வந்தீர்களா? ம்...புதுசுதான் ஆனால் பழசு. புரியவில்லையா? சரி விடயத்துக்குள் செல்வோம்.

இந்த சுரதா அண்ணா அவர்கள் ஒரு "உருமாற்றி"(Converter)ஐக் கண்டுபிடித்தாலும் பிடித்தார், நமது யாழ் நண்பர்கள் இணையத்தின் எல்லாப் பக்கமும் உலவி, தாங்கள் மேய்ந்ததை எல்லாம் உருமாற்றியல போட்டு உருமாற்றி யாழில கொண்டு வந்து கக்குகினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . அவர்கள் இப்பிடி வேற பக்கத்தில போய் மேய்ஞ்சிட்டு, அத இஞ்ச கொண்டு வந்து போட எனக்கு கவலையா இருக்கு. என்ன நமது நிலத்தில ஒண்டும் விளையேலயா? நம்மால் ஒன்றும் உற்பத்தி செய்ய முடியேலயா என்று!!!

அதான் இந்த இளைஞனின் இளமையைக் கொஞ்சம் கவர்ச்சியாக் காட்டுவம் என்று இதனை எழுதுகிறேன்:

இளைஞர்களைப் பொறுத்த வரையில் ஆண்கள் பெண்களைக் கவர்வதிலும், பெண்கள் ஆண்களைக் கவர்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவது வழக்கம். அதேநேரம் தம்மைக் கவருபவர்களை (ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும்) வர்ணிப்பது என்பது காலம் காலமாக இருந்துவரும் இளைஞர் வழக்கம்.

பெண்ணடிமைத்தனத்தை உள்நுழைக்காமல், இயல்பாக அவர்களின் குணங்களையும், உடலமைப்பையும், செயற்பாடுகளையும் வைத்து ஏதாவதொன்றைக் கொண்டு வர்ணிப்பது என்பது அன்று தொட்டு இன்று வரை நிலவுகின்ற ஒன்று.

இடையில் சிறு துணுக்கு ஒன்று:
குழந்தைகள் - முதல் விஞ்ஞானிகள், மிகச் சிறந்த ஆய்வாளர்கள்.
இளைஞர்கள் - முதல் புலவர்கள், மிகச் சிறந்த கற்பனையாளர்கள்.

அந்த வகையில்யாழில் மேயும், பழசுகள் தமது அனுபவங்களையும், இளசுகள் தமது அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வோமா?

சரி... முதலில் நான் தொடங்கிறன்:

ஒரு ஊரில ஒரு இளைஞன் இருந்தானாம். ஐயோ........அப்பிடியில்ல.
சரி... நான் பகுதி நேரமாக Mc Donalds வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வேலை செய்கிறேன். அநேகமாக இரவு வேலைதான். இரவு என்றால் 5:30 இலிருந்து அதிகாலை 3:00 மட்டும். இரண்டு வருடங்களிற்கும் மேலாக வேலை செய்வதால் அங்கு வேலை செய்பவர்கள் எல்லோருடனும் நல்ல பழக்கம். மற்றது இன்னொரு முக்கியமான விசயம். நான் குசினிப் பக்கும் போறேல. என்ர வேலை முன்பக்கம். அதான் சாப்பாட்ட எடுத்துக் கொடுத்திட்டு காசு வாங்கிற வேலை. அப்ப இளமையா, புதுமையா, அழகா பெட்டையள் வந்தால் ரசிக்கிறதுக்கும், வழிவதற்கும் (ஜொள்ளு விடுவதற்கும்) வசதியா இருக்கட்டும் என்றுதான் முன்னுக்கு நிக்கிறனான். நான்தான் இப்பிடியெண்டால், குசினிக்குள்ள நிக்கிறவங்கள் எட்டி எட்டிப் பார்ப்பாங்கள். பெட்டையள் வந்தால் எனக்கு தலைக்குள்ள ஏதோ கலர் கலரா சுத்தும். கொஞ்சம் இது (அதான் அது) காட்டோணும் எண்டிறதுக்காக வேகமா வேலை செய்யிறது. இவங்கள் குசினிக்குள்ள நிக்கிறவங்கள் "டே மெதுவா வேலை செய்யடா" என்று கத்துவாங்கள்.

இப்பிடிக் கொஞ்சநாள் போக ஒரு முடிவுக்கு வந்தன். உந்த சிவன் ஒருக்கா ஒ-ளவையாரிட்ட லொள்ளு விடேக்க "ஒன்று இரண்டு மூன்று என தன்னை வரிசைப்படுத்திப்பாடுமாறு" சொன்னார் அல்லவா. அதப்போல Mc Donalds சாப்பாடுகளைக் கொண்டு பெண்களை வரிசைப்படுத்தினால், அல்லது வகுத்தால் அல்லது வர்ணித்தால் எப்பிடி இருக்குமெண்ட யோசிச்சன். அதன்படி நான் வரிசைப்படுத்தியது இப்படித்தான்:

Mc Nuggets (கோழி இறைச்சியில் செய்த சின்னச் சின்னப் பொரியல்): இதுகள் ஆகலும் சின்னனுகள். 16 வயதுக்குள்.

Cheeseburger/Hamburger (அதான் சின்னனா இருக்கிற போர்கர்): இதுகளும் சின்னப் பெட்டையள். வயது கூடவா இருந்தாலும் சின்ன உருவம், சாதாரண அழகு.

Bigmac (இது தான் பெரிய பேர்கர். மொத்தமா இருக்கும்): இவர்கள் குண்டா இருக்கிற பெட்டையள். அதான் கிரண் எண்டு சொல்லி ஒரு அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நடிப்பா, அவா மாதிரி.

BigXtra (இது Bigmac ஐ விடப் பெரியது. தற்பொழுதில்லை.): இவர்கள் ஆகலும் குண்டா இருக்கிற பெட்டையள்.

Mc Chicken (இது மெல்லியதாக (அளவான) பேர்கர். கோழி இறைச்சியில் செய்த பெரியலோடு உள்ளது): இவர்கள் மிக அழகான உடலமைப்பை உடையவர்கள். அழகோ அழகு.

ம்..இதுதான் எனது வரிசைப்படுத்தல். இதனைத் தேவாரமாக மனனம் செய்து Mc Donalds இல் வேலைசெய்பவர்கள் தினம் தோறும் உச்சரிக்கிறார்கள்.

சரி...இனி நீங்கள் சொல்லுங்கோ...
நான் ஒரு Mc Chicken சாப்பிட்டு வாறன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Reply


Messages In This Thread
இனிமை@இளமை.கொம் - by இளைஞன் - 09-22-2003, 09:33 PM
[No subject] - by sOliyAn - 09-23-2003, 12:28 AM
[No subject] - by sOliyAn - 09-23-2003, 12:29 AM
[No subject] - by Paranee - 09-23-2003, 08:47 AM
[No subject] - by Kanani - 09-23-2003, 10:02 AM
[No subject] - by yarl - 09-23-2003, 10:09 AM
[No subject] - by இளைஞன் - 09-23-2003, 10:27 AM
[No subject] - by yarl - 09-23-2003, 10:42 AM
[No subject] - by இளைஞன் - 09-23-2003, 10:53 AM
[No subject] - by Mathivathanan - 09-23-2003, 12:55 PM
[No subject] - by இளைஞன் - 09-23-2003, 01:10 PM
[No subject] - by Paranee - 09-23-2003, 01:11 PM
[No subject] - by Mathivathanan - 09-23-2003, 01:20 PM
[No subject] - by Mathivathanan - 09-23-2003, 01:27 PM
[No subject] - by kuruvikal - 09-23-2003, 07:32 PM
[No subject] - by இளைஞன் - 09-23-2003, 07:46 PM
[No subject] - by kuruvikal - 09-23-2003, 07:57 PM
[No subject] - by kuruvikal - 09-23-2003, 08:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)