05-22-2005, 03:42 PM
யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் சீனப் பெண் வியாபாரியினால் சிறிலங்காப் பொலிசார் ஒருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ். நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளே நையப்புடைக்கப்பட்டவராவார்.யாழ். நகரில் மணிக்கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த சீன நாட்டு பெண் வியாபாரியை யாழ். நகரில் வியாபாரம் செய்யக்கூடாது எனத் தடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ் வியாபாரியை சீண்டி அவரைத் தாக்கமுற்பட்டார்.
இதனையடுத்து ஆத்திரமுற்ற அந்த சீனப் பெண் வியாபாரி கைகளாலும் கால்களாலும் கான்ஸ்டபிளை நையப்புடைந்தார். இதனையடுத்து அங்கு வந்த பொலிசார் பெண் வியாபாரியை சமரசப்படுத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு விசாரித்த பின் விடுதலை செய்ததாக தெரியவருகிறது.
Puthinam

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>