Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜயின் முன்மாதிரி....!
#3
<b>பிளஸ்_2' தேர்வில் 1,071 மார்க் வாங்கிய பூ விற்கும் ஏழை மாணவரை நடிகர் விஜய் படிக்க வைக்கிறார்.</b>


சென்னை தியாகராய நகர் தெற்கு போக் ரோட்டை சேர்ந்த ஏழை மாணவர் மணிகண்டன். சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், பிளஸ்_2 தேர்வில் 1,071 மார்க்குகள் வாங்கி இருக்கிறார்.

மணிகண்டனின் சிறு வயதிலேயே அவருடைய தந்தை குகநாதன், குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விட்டார். தாயார் லட்சுமி பூ வியாபாரம் செய்கிறார். தினமும் பூ விற்று அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் மகனை படிக்க வைத்தார்.
மணிகண்டனும் பள்ளிக் கூடம் முடிந்ததும், மாலை நேரங்களில் தாயுடன் சேர்ந்து பூ விற்று இருக்கிறார்.


இரவில், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து `பிளஸ்_2' தேர்வில் 1,071 மார்க்குகள் வாங்கியிருக்கிறார். வேதியியல் பாடத்தில் 200க்கு 200 மார்க்கு வாங்கியுள்ளார்.
இந்த செய்தியை பத்திரிகையில் படித்ததும், மாணவர் மணி கண்டனுக்கு நடிகர் விஜய் உதவ முன்வந்தார்.

மணிகண்டனை தனது வீட்டுக்கு வரவழைத்து, அவருக்கு புதிய உடைகள் வாங்கிக் கொடுத்தார். மணிகண்டனின் உயர் படிப்பு செலவு முழுவதையும் அவரே ஏற்றுக் கொண்டார்.


<img src='http://www.dailythanthi.com/images/news/20050521/vijay.jpg' border='0' alt='user posted image'>


"மணிகண்டன் பூ விற்றுக் கொண்டே படித்து சாதனை புரிந்ததை பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டேன். மேற்கொண்டு படிக்க வசதியில் லாததால் வேலை தேடுவதாக அவர் கூறியிருந்ததை படித்து நெகிழ்ந்து போனேன்.

அவருடைய உயர் படிப்புக்கு உதவ விரும்பினேன். என் மக்கள் தொடர்பாளர் செல்வகுமாரிடம் அந்தமாணவர் பற்றி விசாரித்து வரும்படி அனுப்பினேன். அவர் தியாகராய நகர் சென்று விசாரித்தபோது, மணி கண்டன் மிகவும் ஏழை என்பதையும், அவரது தாயாருடன் சேர்ந்து பூ விற்று அந்த பணத்தில் படித்ததையும் தெரிவித்தார். வீட்டில் படுத்து தூங்குவதற்குக் கூட இடம் இல்லை என்பதையும் சொன்னார்.

இரவில், மணிகண்டன் பனகல் பார்க் காவலாளி உதவியுடன் அங்குள்ள மின்சார விளக்கு கம்பத்தின் கீழ் உட்கார்ந்து படித்த விவரமும் எனக்கு தெரிய வந்தது. அதைக்கேட்டு கண் கலங்கினேன்.

எனவே மணி கண்டன் என்ன உயர் படிப்பு படித்தாலும், அதற்கான முழு செலவையும் நான் ஏற்க முடிவு செய்து இருக்கிறேன்.

நான் நிறைய உதவிகள் செய்தாலும், ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் ஒரு திருப்தி கிடைக்கிறது.

60 மாணவ _ மாணவிகளை நான் படிக்க வைக்கிறேன். அவர் களில் சென்னை வியாசர்பாடியில் பானை வியாபாரம் செய்து வந்த சசிகலா என்ற மாணவியும் ஒருவர். அவர் இப்போது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார்.

தொடர்ந்து இதுபோன்ற ஏழை மாணவ_மாணவிகளின் உயர் படிப்புக்கு உதவுவேன்".

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

தினத்தந்தி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 04-07-2004, 09:27 AM
பூ விற்கும் ஏழை மாணவரை நடிகர் விஜய் படிக்க வைக்கிறார். - by vasisutha - 05-21-2005, 10:58 PM
[No subject] - by tamilini - 05-21-2005, 11:29 PM
[No subject] - by kavithan - 05-21-2005, 11:38 PM
[No subject] - by Mathan - 05-21-2005, 11:41 PM
[No subject] - by sOliyAn - 05-22-2005, 01:13 AM
[No subject] - by KULAKADDAN - 05-22-2005, 01:35 AM
[No subject] - by Mathan - 05-22-2005, 01:37 AM
[No subject] - by kuruvikal - 05-22-2005, 01:50 AM
[No subject] - by MEERA - 05-22-2005, 07:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)