09-22-2003, 07:13 PM
வணக்கம் நண்பர்களே...
நட்பு, காதல் - இந்த இரண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பல சூழ்நிலைகளில், பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒன்று. ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் உள்ள நட்பும், ஒரு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பும், <b>ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள நட்பிலிருந்து வேறுபடுகிறதா? </b>இந்த விடயத்தில், அதிகம் ஆண்களே குழப்பம் அடைகிறார்கள். பெண்களைப் பொறுத்தமட்டில் இல்லை என்று சொல்வதைவிடக் குறைவாகவே இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான நட்பு பல நேரத்தில் சில காலங்களின் பின் காதலாக மாறுகின்ற சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. நட்பு என்பது எல்லாத் தரப்பினரிடையேயும் இருக்கிறது. அது வேறு விடயம். ஆனால் <b>ஆண் பெண் நட்புக்கும், ஆண்பெண் காதலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? காமமா?</b>
சரி அதைவிடுத்துக் கொஞ்சம் சமூகத்துக்குள் வருவோம். அதாவது ஆண் பெண் இடையிலான உறவை உடனே காதல் என்று எடுத்துக் கொள்கின்ற போக்கு நம் சமூகத்திடை அதிகம் உள்ளது. இதன் காரணம் என்ன?
அதையும் விடுத்து இணையத்துக்குள் வருவோம். முகம் தெரியாமல், எந்த விபரமும் தெரியாமல் சாற்களின் மூலம் அல்லது மின்னஞ்சல்களின் மூலம் பல ஆண்களும் பெண்களும் பழகுகிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணுடன் அதிகமாகப் பழகத் தொடங்கியதும், உடனே காதல் என்ற புரிதலை ஏற்படுத்துகின்றார்கள் ஆண்கள். அதேபோல் ஒரு பெண்ணும். இதன் காரணம்தான் என்ன?
எனவே இவற்றின் அடிபஇபடைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, காதலுக்கும் நட்புக்குமான தூரம் நீண்டதாக இருக்கு முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது.
இதுபற்றிய உங்கள் கருத்துக்கள், உங்கள் அனுபவங்கள், இந்தக் குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களிற்கான உங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
பி.கு.: இந்தக் கருத்தாடலின் போது, சமூகத்தில் பெண்ணின் நிலை பற்றியும் பேச வேண்டிய அவசியம் ஏற்படலாம். இருந்தாலும் அதனைத் தொட்டுச் செல்லுங்கள், தொடராதீர்கள். பெண்கள் பிரச்சினையைப் பற்றிக் கருத்தாட சமுதாயம் என்னும் பிரிவு உள்ளது. இந்தக் கருத்தாடல் இளைஞர்களை மையமாகக் கொண்டு அமையவேண்டும் என்பது எனது அவா.
நன்றி