05-21-2005, 04:25 AM
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் அரசியற் செயலகம் மீது தேசவிரோதிகள் தாக்குதல்: இரு போராளிகள் படுகாயம்
லங்கா அதிரடிப் படையின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை மாவட்டம் வீரமுனையில் அமைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியற்துறை அலுவலம் மீது ஸ்ரீலங்காப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இரு போராளிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை நான்கு மணியளவில் இரு உந்துருளிகளில் வந்த தேசவிரோதிகள் குறிப்பிட்ட அரசியல் அலுவலகத்தின் மீது கைக்குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது யுகாந்தன்ää ஏகாந்தன ஆகிய போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இவர்கள் சம்பாந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிந்திக் கிடைக்கும் தகவல்களின் படி இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
வீரமுனை அரசியற்துறை அலுவலகத்தை அண்மித்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஈபிடிபி தேச விரோதிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் அண்மைக் காலமாக அடிக்கடி உந்துருளிகளில் காணப்பட்டதாக பொதுமக்களின் தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
இதேவேளை இன்றைய தாக்குதலை நடாத்திய தேசவிரோதிகள் காரைதீவுப் பகுதியிலிருந்து வந்து தாக்குதலை நடாத்தி விட்டு மீண்டும் அப்பகுதிக்கே தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சங்கதி

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS