09-22-2003, 05:25 PM
விடுதலைப்புலிகளின் தளபதிகள் காத்தான்குடிக்கு நேரடியாக விஜயம். முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்வார்கள்.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விஷேட தளபதி த.ரமேஸ் தலைமையிலான பத்து தளபதிகள் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி காத்தான்குடிக்குச் சென்று மக்களிடம் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவைக் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 1990 ஆண்டிற்குப் பின் விடுதலைப்புலிகளின் தளபதிகள் உத்தியோகபுூர்வமாக முஸ்லிம் கிராமத்திற்கு நேரடியாகச் செல்வது இதுவே முதல் தடவையாகும்.
நேற்றுக்காலை விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி த.ரமேஷ், அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், நகரப்பகுதிப் பொறுப்பாளர் சேனாதிராசா ஆகியோருக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளான ஏ.எல்.அப்துல்கபுர், யுூ.எல்.முவின், ஏ.எல்.எம்.அலியார், சாந்தி முகைதீன், எம்.எல்.விலால்காஜியார், எம்.எல்.லத்தீப், ஏ.சீ.எம்.றபீக், கிலு}ல்அலி ஆகியோர் அடங்கிய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு விடுதலைப்புலிகளின் மட்டு நகர் ஞானசூரியம் சதுக்க வீதி அலுவலகத்தில் இடம்பெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளைத் தொடர்ந்து பேணும் நோக்கில் காத்தான்குடியில் நேரடியாக விடுதலைப்புலிகளின் தளபதிகள் சென்று முஸ்லிம் மக்களுடன் உரையாடுவது எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இணைப்பாளராக நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சேனாதிராசா நியமிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் காத்தான்குடிப் பகுதி விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுவது தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளதாகவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதேவேளை தமிழ் பகுதகளில் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிய முழுப் பாதுகாப்பும் அனுமதியும் விடுதலைப்புலிகளால் நேற்றைய சந்திப்பின் போது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான சந்திப்புக்களை பிரத்தியேகமாக தொடர்ந்து இடம்பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003i-1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-2i.jpg' border='0' alt='user posted image'>
நேற்று இருதயபுரத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் சிறப்பு தளபதி ரமேஸ், அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் ஆகியோர் கலந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கைலாகு கொடுத்து வரவேற்பதைப் படத்தில் கணலாம்.
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-3i.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-1i.jpg' border='0' alt='user posted image'>
நேற்று இருதயபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் இருதரப்பினரும் கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படம். தகவல் பாடுமீன்.