05-20-2005, 09:13 AM
Malalai Wrote:வணக்கம் மழலை என்ன கவிதை மழையில அடிக்கடி நனைக்கிறீர்கள் வருத்தம் வரப்போகுது கவனம்...shobana Wrote:இதோ இன்னும் ஒரு வண்ணம்
எங்கே உங்கள் கவியின் கலை வண்ணம்....
<img src='http://rathi.free.fr/bird/173.gif' border='0' alt='user posted image'>
காலைக் கதிரவனோ - நீ
மாலை ஆதவனோ?
மனத்தை கொள்ளை கொள்ளும்
வனத்தை யார் உனக்கு தந்தது?
இயற்கை அன்னை தந்த
இயற்கைக் குழந்தைகள்
இனைந்திட நடக்குது முயற்சி
இடையிலே மேகத்துக்கு
இங்கென்ன வேலை?
கரு மேகம் தடுத்தாலும்
கவலை ஏதுமின்றி
காதலியை காண்கிறாயே
கள்ளமாக எட்டி நீயே....!
கவலை வேண்டாம்
கதிரவனே
கார் மேகங்கள்
கலைத்திடா உன்
காதலை
கலந்திடு நீ உன்
கடல் காதலி
காதலுடன் காத்திருக்கிறாள்....!
என்ன வருத்தம் என்று தெரியும் தானே பாத்து

