05-19-2005, 03:43 PM
Quote:என்னிடம் படங்களை அதிகமாக கொண்ட, அளவில் பெரிய ஒரு கோப்பு உள்ளது. அதை நண்பரொருவருக்கு அனுப்பவேண்டி zip செய்தேன். Zip செய்தபின் 1000MB அளவு என தெரியவருகிறது.பிரித்து அனுப்ப விருப்பமில்லை. எப்படி முழுமையாக ஒரேயடியாக அனுப்புவதென தெரியவில்லை. வழியுண்டா?http://www.upstream.se/?page=183 இது உங்களுக்கு உதவி செய்யும். ஆனால் அனைத்து இணைய வழங்குநர்களும் இச் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்குவதில்லை. (புதிதாக அனுமதி பெறத்தேவையில்லை. ஆனால் சிலர் இணைப்பு வழங்கும்போதே block செய்தே வழங்குகின்றார்கள்.)
பகுதி பகுதியாக அனுப்ப விருப்பமில்லை என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அது சில வேளைகளில் வீண் தாமதங்களை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன். உதாரணத்திற்கு நீங்கள் 1000 mb fileஐ அனுப்பும் போது 999 mb அனுப்பியபின் ஏதாவது ஒரு காரணத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டால் மீண்டும் புதிதாக அல்லவா அனுப்ப வேண்டும். அதையே 10 ஆகப்பிரித்து அனுப்பினால் இலகுவாக அமையும். இதற்காக winrar program பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளேன்

