Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மத்திய கிழக்கில் கருணா பார்ட்டி !!!!!!!!!!!!!!!!!!!!!
#9
<b> தேவனின் கடிதம்---2 </b>

<b> மத்திய கிழக்கு
10.04.2005</b>

அப்புக்கு வணக்கம் நான் நலம் அது போல் உங்கள் சுகத்தையும் அறிய ஆவல் மேலும் இங்கு வெயில் சுட்டேறிக்கிறது 45 c மேல தான் சூடு. வெளியிலை போக இயலாது. முதல் கடிதத்தில் இங்கு வந்துள்ள கருணா குழுவை பற்றி எழுதியிருந்தேன்.படிப்படியாக அவர்கள் எங்களிலிருந்து ஒதுங்கி விட்டார்கள் அவா;களின் நடவடிக்கைகள் அறிவது கஸ்டமாக இருக்கிறது பெரும்பாண்மை சகோதரா;கள் மூலமாகதான் சில செய்திகள் தெரிய வரும் நிலையாகி விட்டது அவர்களிலும் கொஞ்சம் படித்த ஒரு உறுப்பினருடன் மனம்விட்டு கதைக்க கூடிய சந்தர்ப்பம் ஒண்டு கிடைத்தது அவரின் பேர் மதி.அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்


<b> கே: உங்கள் போராட்டம் திசை மாறி போய் விட்டது இப்ப வெளிநாட்டுக்கும் வந்து விட்டீர்கள் இனி இதுகளை விட்டு விட்டு சாதாரண வாழ்க்கையில் ஈடுபடலாமே? </b>
மதி: எங்களுக்கும் ஆசைதான் ஆனா தலைமை சும்மா விடாது.

<b> கே: உங்களுக்காண்டி நாங்கள் தலைமையிடம் பேசிப் பார்கிறோம் நிச்சயம் அவர்கள் மன்னிப்பார்கள். </b>
மதி: நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் நான் சும்மாவிடமாட்டார்கள் எண்டது எங்கள் தலைமையை( கருணாவை)

<b> கே: கருணாவை யார் தலைமையை எண்டு ஏற்றது? தமிழருக்கு ஒரு தலைமைதான் அது பிரபா அண்ணனுடையது </b>
மதி: நீங்கள் வன்னிப்பக்கம் இருந்து கதைக்கிறீங்கள் மட்டகளப்பு பக்கமிருந்தும் பாக்க வேண்டும் யுத்தப் பயிற்சியில் எமது முக்கிய பயிற்சியில் ஒண்டு தலைமையின் கட்டுப்பாட்டை ஏற்று நடத்தல் அதைதான் இப்போ நாம் செய்கிறோம்

<b> கே: அப்ப உங்கள் தலைமை பிழை விட்டாலும் ஏற்பீர்களா? </b>
மதி: யார் சொன்னது எங்கள் தலைமை பிழை விட்டது என்று வன்னி தலைமைதான் பிழை விட்டது

<b> கே: எப்பிடி? </b>
மதி: வன்னியில் நடந்த எத்தனையோ தாக்குதலில் கிழக்கு புலிகளின் பங்கு மிக பெரியளவு

<b> கே: நாங்கள் மறுக்கவில்லையே... </b>
மதி: அப்படி செய்த எங்களுக்கு சரியான கெளரவிப்பு வன்னித் தலைமையால் வழங்கப்படவில்லை

<b> கே : ஏன் உங்கள் கருணாவை வலது கரமாக தலைவர் வைத்திருக்கவில்லையா?... </b>
மதி: அவர் கீழ் இருந்த போராளிகளுக்கு எந்த பதவிகளும் கொடுத்து கெளரவிக்கவில்லை

<b> கே: இப்பிடி உங்களுக்குச் சொல்லி விளக்கியிருக்கிறார் கருணா.இனி யார் சொன்னாலும் உங்களுக்கு விளங்காது அப்பிடி விசுவாசிகளாக இருக்கிறீர்கள் </b>
மதி: நீங்களே சொல்லுங்கள் நான் இயக்கத்தில் சேர்ந்து எவ்வளவோ போராட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன் ஒருநாள் தன்னும் உங்கள் தலைவரை பார்க்கவேயில்லை படத்தில்தான் பார்த்திருக்கிறேன் ஆனால் அம்மான் எங்களுக்கு பயிற்சி தந்ததிலிருந்து பல களங்களில் எங்களுடன் பங்குபற்றியிருக்கிறார் அப்பிடிபட்டவரை தனிய விட்டு வர முடியாது

<b> கே: அப்பிடிபட்டவர்தான் போராளிகளை நடு ரோட்டிலை விட்டுட்டு ஓடினவர்? </b>
மதி: அவரை நம்பி கூடப் போனவர்களுக்கு வழி காட்டியிருக்கிறார் ஏன் எங்களை பாதுகாப்பாக இங்கு அனுப்பவில்லையா?

<b> கே:சரி விசயத்துக்கு வருவம் உங்களால் புலிகளை எதிரித்து அழிக்க முடியுமா? </b>
மதி: நாங்களும் புலிகள்தான் உயிருக்கு பயமில்லாத இயக்கமெண்டால் அது புலி என உங்களுக்கு தெரியும் அவர்களின் திறமை எங்களுக்கு தெரியும் அதுபோல் அவர்களும் அறிவார்கள்.

<b> கே: சரி இப்ப இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிறீர்களே அதைப்பற்றி? </b>
மதி: 1989-90யில் IPKFயை வெளியேற்றும் போதும் நாங்கள் இராணுவத்துடன் இனைந்திருந்தோம்தானே....

<b> கே:அப்போ உங்களால் மட்டகளப்பில் எவ்வளவு ENDLF ஆட்கள் கொல்லப்பட்டார்கள் இப்ப அவர்களுடன் கூட்டு வைத்துள்ளீர்களே? </b>
மதி: இது நான் இங்கு வந்தாப்பிறகு நடந்துள்ளது ஆனா அப்போ கொல்லும்படியும் கருணாதான் சொன்னார் இப்ப சேர்ந்து இயங்கச் சொன்னாலும் தட்டமுடியாது

<b> கே: அப்போ உங்களை சுயமாக சிந்திக்க முடியாத முட்டாள் வீராகத்தான் கருணா உருவாக்கியிருக்கிறார் இப்படி போனால் உங்கள் எதிர்காலம் என்ன? </b>
மதி: எங்களுக்கே தெரியாது இங்கை போகச் சொன்னார்கள் வந்தோம் இனி எப்ப கூப்பிடுகிறார்களோ அப்ப போக வேண்டியதுதான்


இவரின் இந்த பதிலிருந்து ஒரு உண்மை தெரியுது ஏதோ மனவிரக்தியில்தான் இருக்கிறார் என்று இப்போ அவருடன் கொஞ்சம் நெருக்கமாகி அவரை மனம் மாற்றுவதோ எனது முயற்சி அப்பு இங்கை இருந்து கொண்டு எங்களால் இதைதான் செய்ய முடியும்
வேறு புதினங்கள் இல்லை அப்பு

<b> இப்படிக்கு
அன்பின் தேவன்</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 05-17-2005, 08:09 PM
[No subject] - by vasisutha - 05-17-2005, 08:43 PM
[No subject] - by Danklas - 05-17-2005, 08:46 PM
[No subject] - by MUGATHTHAR - 05-17-2005, 10:29 PM
[No subject] - by Danklas - 05-17-2005, 10:44 PM
[No subject] - by sinnappu - 05-18-2005, 12:19 AM
[No subject] - by hari - 05-18-2005, 06:28 AM
[No subject] - by MUGATHTHAR - 05-19-2005, 03:27 PM
[No subject] - by Sooriyakumar - 05-19-2005, 09:13 PM
[No subject] - by MUGATHTHAR - 05-25-2005, 09:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)