05-19-2005, 10:02 AM
கல்யாணம் எப்போ? த்ரிஷா பதில்
<img src='http://www.cinemaexpress.com/images/15thrisha1.jpg' border='0' alt='user posted image'>
கோலிவுட்டில் நம்பர் ஒன் கதாநாயகி என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. தனது பிறந்த நாளைக் கொண்டாட ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பறந்து வந்த த்ரிஷா, தனது தோழிகளுக்கு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் டின்னர் கொடுத்து அசத்தினார். மறுநாள் படப்பிடிப்பிற்காக துபாய் பறப்பதாக ப்ளான். அப்படிப்பட்ட பரபரப்பான நேரத்தில் அவரை சினிமா எக்ஸ்பிரஸýக்காக சந்தித்தோம். முக மலர்ச்சியோடு பேட்டிக்கு "யெஸ்' சொன்னார்.
* "த்ரிஷா'ன்னா ஸ்லிம் என்று அர்த்தமா?
(வாய் கொள்ளாமல் புன்னகைத்து...) தேங்க்யூ. முன்பு நிறைய எக்ஸர்சைஸ் பண்ணுவேன். அதோட எஃபக்ட் இப்பவும் ஸ்லிம்மாக இருக்கிறேன். ஆனால் இப்ப ஜிம்முக்குப் போக கூட நேரமில்லை. ஸ்லிம்மாக இருப்பது ரொம்பவும் செüகர்யமாக இருக்கிறது.
* அட்டகாசமாக டான்ஸ் ஆடுறீங்களே எப்படி?
என்னுடைய ஏழு வயசிலேயே "பாலே' நடனம் கற்றுக் கொண்டேன். சினிமாவுக்கான நடனம் சொல்லி கொடுத்தவர் கள் கலா மாஸ்டரும், ராஜுசுந்தரம் மாஸ்டரும்தான். ஒரு மாதம் அவர்களிடம் பயிற்சி பெற்றேன். நான் நடித்த தெலுங்கு படமான "வர்ஷம்' படத்தில் "நீ ஒஸ்தானன்டே நு ஒதன்டானா' பாட்டு சூப்பர்ஹிட் ஆச்சு. அதில் ஒரு பாடல் நல்லாப் பேசப்பட்டது. நான் இவ்வளவு நல்லா டான்ஸ் பண்றேன்னா என்றால் அதற்கு காரணம் பிரபுதேவா மாஸ்டரும்தான்.
* தெலுங்கில் பிரபுதேவாவின் இரண்டாவது படத்திலும் நடிக்கிறீர்களே?
பிரபுதேவா சார் தெலுங்கில் "நீ ஒஸ்தானன்டே நு ஒதன்டானா' படத்தை டைரக்ட் செய்தார். அதில் நடிக்கும் போது கதையும், கதைக் களமும் ரொம்ப பிடித்திருந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். மறுபடியும் "பெüர்ணமி' என்ற படத்தை டைரக்ட் பண்ணுகிறார். அதில் "பெüர்ணமி' என்ற கதாபாத்திரமாகவே நடிக்கிறேன். பிரபாஸ் ஹீரோ. இதில் எனக்கு பவர்புல் கேரக்டர். அதாவது ஹீரோவுக்கு சமமா கதாபாத்திரம்.
* தெலுங்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு உங்களை ஆதரிக்கிறார்கள்?
எனக்கு ரசிகர்கள் ஒரு பெரிய இடத்தைக் கொடுத்திருக்காங்க. "வர்ஷம்', "நீ ஒஸ்தானான்டே நு ஒதன்டானா' படங்களால் பெஸ்ட் ஹீரோயினிங்கிற பேரு கிடைச்சிருக்கே.
* தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் நடிக்கிறீர்களே, இரண்டு இடங்களிலும் ரசனை மாறுபடுமே?
ரசனை மாறுபடும்னு சொல்ல முடியாதுங்க. தெலுங்கில் எடுத்த "ஒக்கடு' படம் தான் தமிழில் "கில்லி'ன்னு ரீமேக் ஆச்சு! அங்கேயும் நல்லாப் போச்சு! இங்கேயும் நல்லா போச்சு! அப்போ ரசனை ஒண்ணாதானே இருக்கு.
* நீங்கள் ஹைதராபாத்தில் வீடு வாங்கி குடியேறிவிட்டதாக பேசப்படுகிறதே?
கண்டிப்பா இல்லை. நான் இன்னமும் பஞ்சாராவுல தான் இருக்கேன். அங்கே எனக்குன்னு பர்மனென்ட் ரூம் இருக்கு. எந்தப் பிரச்சனையும் இல்லை. தெலுங்கில் மூன்று படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவுல போயிருக்கு. தவிர இப்ப ரெண்டு படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இந்த வருஷம் தெலுங்கு உகாதி வருடபிறப்புக்கு ஜெமினி டிவியில் சிறந்த நடிகைன்னு விருது கொடுத்து கெüரவிச்சாங்க. அரசாங்க விருதும் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இப்ப நித்தின் கூட, ராகவேந்திராராவ் டைரக்ஷனில் நடிச்சுக்கிட்டிருக்கேன். துபாயில் பத்து நாள் ஷூட்டிங். அதற்காகதான் பறந்துக்கிட்டிருக்கேன்.
* தெலுங்கில் நல்ல வருமானம் வருவதால்தான் தமிழ்ப் படங்களைக் குறைச்சுக்கிட்டீங்களா?
அப்படியெல்லாம் இல்லை. தமிழ்ல வருஷத்திற்கு இரண்டு படங்களில் நடிக்கிறேன். எனக்கு கால்ஷீட் பிரச்சனை வராதபடி பார்த்துக்கறேன். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்திலும், பிரபாஸ் கூட ஒரு படத்திலும் நடிக்கிறேன். அதேபோல தமிழில் ஹரி டைரக்ஷனில் சூர்யாவுடன் ஒரு படத்திலும், "ஜெயம்' ரவியுடன் லஷ்மி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். விக்ரம் படத்துக்கு கூட பேசிகிட்டு இருக்காங்க.
* ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏதும் வந்ததா?
ஹிந்திக்கு போகணும்னா அது நல்ல படமா இருக்கணும். ஏனோ தானோன்னு போறதுல எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு தமிழ் ரசிகர்களிடமும், தெலுங்கு ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கு. இவர்களைக் கடந்து போறேன்னா அது பிரம்மாண்டமான படமா இருக்கணும்.
* தமிழில் யார் டைரக்ஷனில் நடிக்க விரும்புகிறீர்கள்?
மணிரத்னம் சாரின் "ஆய்த எழுத்து' படத்தில் நடித்தாலும் தொடர்ந்து மணிரத்னம், பாலா, ஷங்கர், தரணி போன்றவர்களின் படங்களில் நடிக்க ஆசை. அதே மாதிரி "வாலி' படத்தில் சிம்ரன் நடிச்ச மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும். இப்போ தெலுங்கில் த்ரிஷா நடிக்கிற மாதிரி நமக்கு வாய்ப்பு வரணும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. அதுமாதிரி நான் பேசப்படுகிற அளவில நடிக்க வேண்டும்..
* மும்பை நடிகைகள் தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சிக்கு எந்தத் தடையும் சொல்லாமல் நடிக்கிறார்கள். அவர்களுடன் போட்டி போட்டு உயர்ந்திருக்கிறீர்களே? அது எப்படி?
எனக்கு மும்பை நடிகைகள் மீது எந்த எதிர்ப்பும் கிடையாது. திறமையான நடிகைகளை மட்டும்தான் ரசிகர்கள் வரவேற்பார்கள். அவர்கள் தங்களுடைய இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு வந்து தெரியாத மொழியில், புரியாத வசனத்தைப் பேசிக் கடுமையாக உழைக்கிறாங்க. நான் உழைக்கிற மாதிரியே அவங்களும் உழைக்கிறாங்க. இங்கே குஷ்பு, ஜோதிகா, சிம்ரன்னு மூனு பேர்தான் ஜெயிச்சிருக்காங்க. ஆனா முன்னூறு பேர் திரும்பிப் போயிருக்காங்க. எத்தனையோ பேர் ஒண்ணு, ரெண்டு படத்தோட காணாம போயிருக்காங்க. டான்ஸ், லுக், நடிப்புத் திறமை என எல்லாம் இருந்தா தான் ஜெயிக்க முடியும். நான் வந்த போதே பெரிய இயக்குனர்களின் படங்கள் என்பதால் என்னுடையத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் கிடைத்தது. இப்போது தெலுங்கில் ஜெயிக்கக் கூட அதான் காரணம்.
* மிஸ் த்ரிஷா மிஸஸ் த்ரிஷாவா எப்ப ஆகப் போறீங்க?
இப்பவே கல்யாணமா? நல்ல படங்கள் நிறைய பண்ணனும்னு ஆசையா இருக்கு. இப்போதைக்கு என் சிந்தனை இதுதான்.
Cinema Exp

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>