Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெற்றி யார் பக்கம்...?!
#1
<img src='http://img264.echo.cx/img264/2447/jesus40ip.jpg' border='0' alt='user posted image'>

<b>வயற்கரைக் குருவியொன்று
வான்வெளிதனில் வட்டமடிக்க
வந்த வல்லூறும் நோட்டம் விட
வரம்பிருந்து ஒருவன் குறிவைக்க
வரவு காத்து ஒருவன் கண்ணி வைக்க
வரும் சுழற் காற்றுச் சமனிலை குழப்ப
வண்ணச் சிட்டது
வகையாய் சிறகடித்துக் களிக்கிறது
வரம்பில்லா வானத்தில் சுதந்திரமாய்...!

வண்ணம் வண்ணமாய்
வகை வகையாய் பேசும் மனிதரெல்லாம்
வக்கணையாய்ப் பேசுகிறார்
வரவால் தாம் உயர்வினராம்
வதையில்லா உலகு படைத்து
வரவு செலவு பார்த்து
வசதியாய் வாழ்கின்றனராம்
வரம்பில்லா அறிவு
வகையாய் கொண்டதால்
வரம்பிட்டு வாழ்கின்றனராம்
வடிவாய்ச் சொல்கின்றார்
வாட்டம் அவர் வதனத்தில்
வழிவது மட்டும் ஏன்...??!

வட்டு ஒன்று
வடிவாய் நோக்கியது
வட்டமடிக்கும் வண்ணச் சிட்டையும்
வளவிருந்த மாளிகை வீட்டு மனிதரையும்...!
வரைவிலக்கணம் ஒன்று வரையலானது
வர்ணம் முதலாய்
வகை பிரித்து பகை வளர்த்து
வம்புகள் அங்கு வரவாக்கி
வரம்புகள் கற்பனையாகினும்
வகை வகையாய் தேசங்கள் பிரித்து
வஞ்சனைகள் பெருகி
வகையான அமைதியழித்து
வரமாம் இயற்கையின் விதி மறந்து
வசதி என்று உண்மை வாழ்வழித்து
வருங்காலந்தனை மாசுறுத்தி
வாழும் மனிதரை
வண்ணச் சிட்டது
வகையாய் வாழ்வியலில் வென்றதாய்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வெற்றி யார் பக்கம்...?! - by kuruvikal - 05-19-2005, 04:02 AM
[No subject] - by kuruvikal - 05-19-2005, 04:10 AM
[No subject] - by kavithan - 05-19-2005, 04:46 AM
[No subject] - by hari - 05-19-2005, 08:43 AM
[No subject] - by வெண்ணிலா - 05-19-2005, 09:06 AM
[No subject] - by kuruvikal - 05-19-2005, 09:20 AM
[No subject] - by KULAKADDAN - 05-19-2005, 11:20 AM
[No subject] - by tamilini - 05-19-2005, 11:40 AM
[No subject] - by Malalai - 05-19-2005, 02:30 PM
[No subject] - by kavithan - 05-19-2005, 02:57 PM
[No subject] - by stalin - 05-19-2005, 03:35 PM
[No subject] - by kuruvikal - 05-19-2005, 03:58 PM
[No subject] - by Mathan - 05-19-2005, 05:13 PM
[No subject] - by eelapirean - 05-19-2005, 08:12 PM
[No subject] - by shanmuhi - 05-19-2005, 10:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)