05-18-2005, 04:56 PM
Malalai Wrote:<img src='http://img129.echo.cx/img129/8189/images3bq.jpg' border='0' alt='user posted image'>மழைலையின் கள்ளமற்ற மனதில்
மேகம் போர்த்த சூரியனாக
புத்தகம் மூடிய மயிலிறகாக
இலைமறை கனியாக
தலைமறைவாக தனியாக - நீ
ஏன் இருக்கிறாய்
என்னை ஏன் தவிர்க்கிறாய்?
உன்னை நான் தேடிடும் வேளையில்
என்னை நீ கண்டிடவில்லையா?
கண்ணுக்குள் கண்மணியாக
என்னுக்குள் உன்னை பாதுகாக்கின்றேன்
விண்ணுக்குள் நீ ஏன் ஒளிக்கின்றாய்?
சிதறிடும் சிந்தனைக்குள்
சிந்திடும் உன் நினைவுகள்
முந்திடும் வேளையில்
வந்திடு என்னிடமே....!
காற்றாகி உன்னை நான்
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?
கடலாக நான் மாறி
தீவாக உன்னை மாற்றி
என்னுள்ளே உன்னை
அன்புச் சிறை வைப்பேன்......!
பொறுத்திருந்த காதல்
பொறுமையான காதல்
பெருமை பெறும்
அன்று ஏற்றுவேன்
காதல் தீபம்....!
அன்றில் மலர்ந்த செந்தாமரையாக
உன் வருகை பார்த்து மலர்கின்றேன்....!
என் மனவானில் இன்று
உன் முகம் தேடிப் பார்க்கின்றேன்.....!
ஒரு நொடியில் உன்னுடன் சேர்ந்திடவே
உனக்காகவே இன்று நான் பிறக்கின்றேன்....!
காதலை விதைத்தது யாரோ?
காதல் தவறல்ல -ஆனால்
காதல் காதலாக இருக்க வேண்டும்
வெறும் சில்லறைக்கும்
காமத்துக்கும் காதல் வருகிறதிங்கே
கவனம் மழலை கவனம்..
சின்னஞ்சிறுவனோ...
பென்னம் பொரியனோ!
யான் அறியேன்
மழலை என்ற சொல்கேட்டு
மழலையாக பார்த்து சொல்கின்றேன்...
18 வயதில் காதல் இனிக்கும்
19 வயதில் காதல் சுவைக்கும்
20 வயதில் காதல் இருக்கும்
21 வயதிவ் காதல் இனிமை
22 வயதில் காதல் தொடர்ந்தா....
23 வயதில் காதலர்கள் பழகினர்ல...
24 வயதில் பெற்றவர்கள் சம்மதித்தால்....
25 வயதில் மற்றவர்கள் சம்மதித்தால்...
26 வயதில் திருமணம் நடந்தால்
27 வயதில் மகிழ்ச்சி.....
28 வயதில் உறவுகளின் தொடக்கம
29 வயதில் பாசமுள்ள குடும்பம்
30 வயதில் முளைவிடும் பிரச்சினைகள்.......
இது தான் வாழ்க்கை....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

