05-18-2005, 04:33 PM
Quote:மேற்கோள்:நன்றிகள் தந்தையே...எங்கு சென்று விட்டீர்கள்? உங்களை காணாது அரச அவையும் மக்களும் கதி கலங்கி விட்டார்கள்
காற்றாகி உன்னை நான்
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?
அருமையான வரிகளுடன் கூடிய கவிதை!
வாழ்த்துக்கள் மழலை!
Quote:என்னை மறந்திட்டீங்களே..எனக்கும் புரியும்! சரி..சரி.. நடக்கட்டும்!என்ன தந்தையே இப்படி சொல்லிவிட்டு நழுவிறிங்க...பாவம் நீங்க உங்களுக்கு வந்த மகளும் சரியில்லை..வாய்த்த மந்திரியும் சரியில்லை.....
Quote:அன்பின் ஆழங்கள் அளந்திட அளவு தந்து மனதோடு கூடிவிட்ட மலருக்கே குருவிகள் சொந்தமாச்சே...தங்கையே...! அதுகளுக்கு உங்கள் கவிதையின் ஆழம் அளக்கத் தெரியாதா என்ன...! மலர் உண்மை மறைத்து மெளன மொழியாக்கும்... குருவி மறைக்காமல் அதைக் கீச்சிடும்...!நீங்க அதிஸ்டக்காரக் குருவி....மலர் மலர்ந்திட்டே உங்க தோட்டத்திலை....நம்ம தோட்டத்திலை தான் தோட்டக்காரனே இல்லையே...
Quote:என்ன மன்னா.. இளவரசி... உள்ளம் ஏங்கித் தவிக்கிறார்.. இளவரசன் காணாது துடிக்கிறார்.. நீங்கள் நடக்கட்டும் என்று நடையக் கட்டுகிறீர்கள்...பாவம் இளவரசி.... நாளைய பட்டத்து ராணிக்கு.. இப்படி ஒரு நிலையா...???! உடனடியாக மந்திரியாரை அழைத்து ஆலோசனை பண்ணி...இளவரசியின் மனம் கவர்ந்த அந்தக் கள்வனைப் பிடித்து வர உத்தரவிடுங்கள்...!அவன் தான் கள்வன் என்றாச்சே...அப்புறம் எப்படிப் பிடிக்கிறது..மந்திரிக்கும் வயசு போட்டுது.....பாவம் தள்ளாத வயசில ஏன் சிரமத்தைக் கொடுப்பான்......விட்டுடுவம் குருவி அண்ணா.... :wink: :wink: :wink:
" "
" "
" "

