05-17-2005, 02:09 PM
Mathan Wrote:சந்திரமுகி, சச்சின்- இலங்கை நிலவரம்
புகை நுழையாத இடங்களிலும் தமிழ் சினிமா புகுந்துவிடும். தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம், திரிகோணமலை, கொழும்பு என இலங்கையின் பல பகுதிகளில் இறக்கை கட்டிப் பறக்கிறது தமிழ் சினிமா.
ரஜினி, கமல் படங்களுக்கு இங்கு ராஜமரியாதை. அடுத்த இடம் விஜய்க்கு. அதுவும் 'கில்லி', 'திருப்பாச்சி'க்கு பிறகு முதலிடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் விஜய்.
இந்தியாவில் சென்ஸார் செய்யப்பட்டிலிருந்தாலும், இலங்கை தன் பங்குக்கு கத்திரி வைத்த பிறகே தமிழ் படங்களை அனுமதிக்கிறது. பிறகு தமிழர்கள் பகுதியிலுள்ள போராட்டக்குழுக்கள் அக்கு வேறு ஆணி வேறாக படத்தை அலசி, தேவைப்பட்டால் சில இடங்களில் கத்தரி போட்டு, படம் தியேட்டரை அடையும்போது பல கைகள் பட்டிருக்கும். அப்படியிருந்தும், கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை, தெகிவளை, மருதாணை, யாழ்பாணத்திலுள்ள கன்னாகம், சங்கானை, நெல்லியடி, சாவகச்சேரி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறுது. கட்டணமும் அதிகம். இங்கு 70, 80 ரூபாய் என்றால் அங்கு 100,120!
புத்தாண்டு ரிலீஸில் சச்சினுக்கே முதலிடம் அளித்துள்ளனர் இலங்கை தமிழர்கள். விஜய்படம் ஒடும் தியேட்டர்களில் கூட்டம் இன்றும் அலைமோதுகிறது.
புதிய படங்கள் தவிர சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இன்றும் கணிசமான ரசிகர்கள் இலங்கையில் உள்ளனர். அங்குள்ள முக்கியப் பிரச்சனை திருட்டு விசிடி. ஆனாலும் இதையும் மீறி தமிழ் சினிமா இலங்கை தமிழர்களை தியேட்டர்களுக்கு இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
சினி சவுத்
இது எந்த அளவுக்கு உண்மை என்று இலங்கையில் உள்ள கள உறவுகள் தான் சொல்லணும்
இலங்கையை நம்பிதான் சினிமா எடுக்கினமாக்கும் :twisted:
[b][size=18]

