05-16-2005, 07:58 PM
Quote:அவர் சொல்கிறார் தனக்கு இந்த சிக்ரெட்டை அடிக்காவிட்டால் யோசனை வராது எண்டு அதில் எந்தவிதமான விளைவுகள் இருந்தாலும் அவரால் நிப்பாட்ட முடியாது இதுக்கு என்ன காரணம் எண்டு நினைக்கிறீங்கள்
இதற்கு காரணம் மனம்..Sigmund Freud என்னும் psychologist இன் விளக்கப்படி அந்த புகை விடுபவர் Defense Mechanisms எனப்படும் ஒரு வகையான "தந்திரத்தை" அவர் அறியாமலேயே (unconsciously) உபயோகிக்கின்றார்....இந்த Defense Mechanism பல வகையில் உண்டு. அவர் உபயோகிப்பது Rationalization எனப்படும். Rationalization என்பது ஒருவர் செய்யும் அல்லது செய்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல்.
Inventing a logical reason to justify an already taken emotional actions.
இவை அனைத்தும் எமது நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியில் நடைபெறுவதால் மனிதர்களுக்கு தாங்கள் அதனால் தான் செய்கிறோம் என்று அறிய வாய்ப்பில்லை....இப்படியான தந்திரங்களை உபயோகிப்பதற்கான காரணம் Ego (works on "reality principle") என அழைக்கப்படும் ஒரு அம்சம் எம்முள் இருப்பதனால். நாங்கள் சமூகத்தின் அடிப்படைகளுக்கு முரண்பாடாக ஏதாவது செய்ய முனைந்தால் அது (Ego) எமக்கு எச்சரிக்கை செய்யும்...அப்படி அது எச்சரிக்கை செய்யும் வேளையில் எமது மனதிற்குள் குழப்பங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்கவே Defense Mechanism உபயோகத்திற்கு அழைக்கப்படுகிறது Unconscious mind இல் இருந்து.....இப்ப பாருங்க, புகை பிடிப்பவருக்கு தெரியும் புகை பிடிப்பது தனக்கும் நல்லது இல்லை மற்றவர்களுக்கும் நல்லது இல்லை என்பது..ஆதனால் அவரின் மனம் சஞ்சலம் அடைகிறது...அதைத் தவிர்க்க அவர் rationalization எனப்படும் தந்திரத்தைக் கையாள்கிறார்...(இந்தத் தந்திரங்கள் சுயநினைவுடன் செயற்படுவதில்லை...எல்லாம் unconscious mind இல் தான்) தந்திரம் உபயோகத்திற்கு வந்ததும் அவர் மனம் சந்தோசம் அடைகிறது. இப்ப தெரியுதா அவர் ஏன் சிகரட்டை உள்ள விட்டால் தான் ஜடியா வெளிய வருகுது என்று சொல்கிறார் என்று.....
(சரி முகத்தார் தாத்தா..நீங்க கேட்டிங்க என்று நான் சொல்லிட்டன் அந்த புகை பிடிப்பவர் வந்தால் அடியை நீங்க தான் வாங்கணும்..நான் உங்க சந்தேகத்தைத் தான் தீர்த்து வைத்தேன்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen: )
" "
" "
" "

