05-13-2005, 03:24 PM
டண் சின்னப்பு முந்தி ஒருக்கா தண்ணி அடிக்கேக்கை சொன்ன கதை இது உண்மை பொய் தெரியேலை என்னெண்டால் அப்ப ஒருக்கா வன்னி காட்டுக்கை சின்னப்பு தனிய மாட்டுப்பட்டுட்டார் என்ன செய்வம் எண்டு நினைச்சுப் போட்டு தேவாரத்தை பாடிக் கொண்டு ஆள் நடந்து போயிருக்கிறார் தீடீரென கரடி ஒண்டு குறுக்கை வந்திட்டுதாம் சின்னப்புக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை என்ன செய்வம் எண்டு போட்டு கண்ணை மூடி கடவுளை கும்பிட்டிருக்கிறார் ஒரு சத்தத்தையும் காணேலை எண்டு போட்டு கண்ணை திறந்து பாத்தால் கரடியும் கண்ணை மூடிக் கொண்டு இருந்திச்சாம் சின்னப்பு துணிவை வரவழைத்துக் கொண்டு கரடியை கேட்டாராம் நான்தான் சாகப் போறேன் எண்டு கும்பிடுறன் எண்டால் நீ என்னத்துக்கு கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறாய்? எண்டு அதுக்கு கரடி சொல்லச்சாம் "நானும் எதாவது சாப்பிடுவதற்கு முன்னம் கடவுளை கும்பிடுவேன்" எண்டு.... சின்னப்பு டக்கெண்டு மூளையை பாவித்து அப்பிடியா? இன்னும் கொஞ்சம் கும்பிடுவம் எண்டு கரடிக்கு சொல்லி கரடி கண்ணை மூடியதும் கிரேட் எஸ்கேப் ஆனதாக கூறினார்...
(குறிப்பு;:-------கரடி எப்பிடி தமிழ் பேசியது எண்டு கேக்கப்படாது.............)
(குறிப்பு;:-------கரடி எப்பிடி தமிழ் பேசியது எண்டு கேக்கப்படாது.............)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


