Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிபந்தனைகள்
#3
கள அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்

[quote]இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.

தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.

[b]நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=328 கருத்துக்களக் குழுக்கள் பற்றிய விளக்கத்தில் எழுதப்பட்ட நிபந்தனை. மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்தப்படுகிறது. கவனத்தில் கொள்ளவும்.

[b]




Messages In This Thread
நிபந்தனைகள் - by Mohan - 06-07-2003, 05:07 PM
[No subject] - by yarlmohan - 06-19-2003, 09:00 PM
களநிபந்தனை - by வலைஞன் - 05-13-2005, 02:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)