05-13-2005, 04:05 AM
Quote:அது தவிர தேர்தல் உள்ளிட்ட சில வேலைகளை காரணாமாக எனது வாதத்தை வைப்பதில் தாமதமேற்பட்டது. அப்போது சோழியன் அண்ணா என்னை உற்சாகப்படுத்தி இயன்றவரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவ்ருடைய அழைப்பையும் சியாம், இளைஞன், மழலை உட்பட மற்றய நண்பர்களின் அழைப்பையும் ஏற்று இதுவரை என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பை கேட்டுக்கொண்டு எனது வாதத்தை தொடங்குகின்றேன்.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உற்சாகமாக வேறு விடயங்களையும் கவனித்துக்கொண்டே தனது வாதத்தை முன்வைத்திருக்கிறார் மதன் அவர்கள். வேலைப்பளுக்களிடையேயும் பட்டிமன்றம் தொடர ஒத்துழைத்ததற்கு நன்றி கூறிக்கொண்டு அவரது கருத்துகளைப் பார்ப்போம்.நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறதா? உற்சாகப்படுத்துகிறதா? என பட்டிமன்றத்தை நடாத்த வெளிக்கிட்டால்.. எதிரணிகளே! நீங்கள் என்ன நன்மை தீமைகளைப்பற்றி ஆராய்ந்து தலைப்பைத் திசை திருப்புகிறீர்கள்? என்று அதிரடியாகக் கேட்கிறார் மதன் அவர்கள்.
ஒருவன் மரத்தடியில் களைப்படைந்து தூங்குகிறானா அல்லது களிப்படைந்து தூங்குகிறானா எனப் பார்க்கவிட்டால்.. அவன் நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களே.. இது தேவையற்றது என்று சொல்கிறார் மதன் அவர்கள்.
'சின்னத்திரை' மனிதர்களைக் கட்டிப்போடுகிறது.. எப்படி? அதனால் கட்டுண்டவர்களால் சமையலில்லை.. சாப்பாடில்லை.. ஆகையால் வாயும் வயிறும் கட்டப்பட்ட நிலை.. இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ.. மதனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது..!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Quote:இந்த நிகழ்சிகளை பார்பதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு முன் முடங்கி கிடப்பதால் அயலவர், நண்பர்கள் உள்ளிட்ட ஏனைய மனிதர்களுடன் பேசும் நேரம் குறைகின்றது, அதனால் மனிதர்களுடனான புரிந்துணர்வு, நட்பு, கருத்து பகிர்வு என்பது குறைகின்றது. இதனால் பார்ப்பவர்கள் எல்லாம் புதியவர்களாகவும் விரோதிகளாவும் தோற்றமளித்து தன்னம்பிக்கை குறைகின்றது, அது குறைந்தால் மனிதன் சோம்பேறியாவான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.இது மதனின் அனுபவம்.. எனது அனுபவம் என்னவென்றால்.. இப்போதெல்லாம் நகை, புடவை கதைகளெல்லாம் ஓடி விலகி.. சித்தி என்ன செய்யப் போகிறா.. செல்வியை ஆண்டவர் அப்படி ஏமாத்தியிருக்கவேண்டாம்.. போன்ற கதைகளே பெருகி வருவதுபோலத் தோன்றுகிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடுத்து.. பாடசாலையிலே பல்கலைக் கழகத்திலோ ஒரு விடயத்தை எழுதச் சொன்னால்.. உடனே கணனியிலே கூகிள் போன்ற தேடற்பொறிமூலம் மாணவர்கள் சுலபமாக எழுதி சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பிக்கிறார்கள்.. 'கூகிள்' தேடலால்.. ஒரு மாணவனது சுயதேடல் குறைந்துவிட்டதே.. தேடலில்லாத மனிதச் சோம்பேறியாகிவிட்டானே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மதன் அவர்கள்.
அடுத்து விஞ்ஞான ரீதியாகவே ஒரு கருத்தைக் கூறுகிறார்.. வளியிலுள்ள ஒட்சிசன் குறைவதால்.. மனிதன் சோம்பேறியாகிறான் என்பதே அது.
ஆக, தனது வாதத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் கருத்துகளைத் தந்த மதன் அவர்களுக்கு நன்றி கூறி.. தொடர்ந்து கருத்து கூற மதுரன் அவர்களை வரவேற்கிறோம். நன்றி.
.

