09-20-2003, 09:12 PM
Mathivathanan Wrote:[quote=Mullai]
பாலிலும் வெண்மை பனியிலும் வெண்மை
பச்சை இளம் கிளி நீ சொல்வதும் உண்மை
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்து
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ பெண்ணென்ன பெண்ணோ?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ?
ஒரு பழைய சினிமாப்பாடல்
ஆயிரத்தில் ஓருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா..
பழக்கத்திலே குழந்தையம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
பாலிலும் வெண்மை..
பனியிலும் மெண்மை..
பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வதும் உண்மை..
பாவிகள் நெஞ்சம்..
உரைத்திடும் வஞ்சம்..
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்..
தேன் என்ற சொல் என்றும் தேனாகுமோ..
தீ யென்று சொன்னாலும் தீயாகுமோ..
ஆயிரத்தில் ஓருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா..
பழக்கத்திலே குழந்தையம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
பெண்ணோடு தோன்றி..
பெண்ணோடு வாழ்ந்து..
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ..?
நெஞ்சென்ன நெஞ்சோ..?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ..?
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லாம்..
ஆனாலும் பொய்யெண்று நான் சொல்லுவேன்..
ஆயிரத்தில் ஓருத்தியம்மா நீ..
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ..
பார்வையிலே குமரியம்மா..
பழக்கத்திலே குழந்தையம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
படம் கைகொடுத்த தெய்வம்
பாடியவர் சௌந்தரராஜன்
எழுதியவர் கண்ணதாசன்
இசை விஸ்வநாதன் இராமமூர்த்தி
நன்றி முல்லை..
அருமையான சினிமாப்பாட்டு..
பகுதியை மட்டும் அரைகுறையாக எழுதியிருந்தீர்கள்.. எனவே முழுவதுமாக திருத்தி எழுதியுள்ளேன்..
மேலும் இப் பாடலை யார் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடுகின்றார்(உறவுமுறை)
என்பதையும் ஏன் பாடுகின்றார் எப்பதையும் விளக்குவீர்களா..?
:?: :?: :?:
Truth 'll prevail

