05-11-2005, 08:22 PM
சம்பவம் நடந்த இடத்தில் நின்றுவிட்டு எதுவும் தெரியாதென கைவிரிப்பதா?
கண்காணிப்புக்குழு கூறியதற்கு தமிழ்க்கூட்டமைப்பு கண்டனம்
மட்டக்களப்பு சந்திவெளிச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாதென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறியுள்ளதைஇ மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
சந்திவெளியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய இராணுவ சோதனை நிலையத்தை அகற்றக் கோரி திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கூட்டமைப்பு எம்.பி.க்களில் நால்வரும் கண்காணிப்புக் குழுவின் மாவட்ட தலைவரும் அங்கிருந்தனர்.
எனினும்இ இந்தச் சம்பவம் பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் சம்பவம் நடைபெற்றபோது தாங்கள் எவரும் அவ்விடத்தில் இருக்கவில்லை என்பது போல் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அவர்களது இந்தக் கூற்றையே கூட்டமைப்பு எம்.பி.க்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன்இ மோசமான சம்பவமொன்று பற்றி கண்காணிப்புக் குழுவினர் பொறுபற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாகவும் சம்பவம் நடைபெற்ற போது கண்காணிப்புக் குழுவினரும் அங்கு நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் இந்தச் சம்பவத்தை இராணுவப் பேச்சாளர் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக கூற முற்படுவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்
தினகுரல்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS