Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்து அறிவுஜீவிகள், நவீன சடங்குகள்
#1
ஈழத்து அறிவுஜீவிகள், நவீன சடங்குகள்.

கடந்த தடவை திருக்கோணமலை சென்றிருந்தபோது,
என்னுடைய நண்பர் ஒருவரை சந்தித்தேன்.
பேச்சுக்கிடையில், வ. ஐ. ச. ஜெயபாலன் இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டார்.
எழுத்தாளர்களுடன் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லையென்ற போதும், மேற்கண்ட எழுத்தாளரை நான் அண்மையிலேயே சந்தித்திருந்தபடியால் பதிலளிக்கக்கூடியதாக இருந்தது.

" எல்லா அறிவுஜீவிகளுக்கும், கடைசியில் என் ஜீ ஓ க்கள் தானே புகலிடம்" என்றார் அந்நண்பர்.

அவரும் தற்போது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடதான் பணிபுரிந்துவருகிறார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் இங்கே என்ன செய்கின்றன, எப்படியெல்லாம் எம்மை கேவலப்படுத்துகின்றன என்பதை இந்த ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது.

சம்பவங்கள் எதையாவது சந்திக்க நேர்ந்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆனால், அவர்களது பணம் எம்மவர்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை பார்த்தால் எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

என் ஜீ ஓ க்களின் காசுக்காக எமது "அறிவுஜீவிகள்" நடத்தும் கருத்தரங்குகளும், புத்தகவெளியீடுகளும் மிகவும் அருவருப்பானவை.
சமாதானம் பற்றிய சிங்களப் பொதுப்பார்வையைக்காட்டிலும் அருவருப்பானவை.

திருக்கோணமலையில் நிகழும் இவ்வாறான ஒன்றுகூடல்களுக்கு நண்பர்களை சந்திக்கமட்டுமே போய்வருவதுண்டு. தற்போது அதுவுமில்லை.
அப்பா தான் இவ்வாறு தவறுதலாக கலந்துகொண்டு எரிச்சலடைந்துபோன நிகழ்ச்சிகள் பற்றி தொலைபேசியில் தனது அருவருப்பை கொட்டிக்கொள்கிறார்.

எல்லா ஒன்றுகூடல்களுக்கும் கருத்தரங்குகள்க்கும் பெயர் வைக்கும்போது, தலைப்பிடும்போது அதில் கட்டாயமாக "சமாதானம்" என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்பது தற்போது வடக்குக்கிழக்கில் எழுதப்படாத விதி.
பணமீட்டும் சூத்திரம்.
கூடவே விடுதலைப்புலிப் பிரமுகர் ஒருவரை அழைப்பது.
வசதிப்பட்டால் யாராவது ஒரு தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரை அழைப்பது.

மேற்படியான"அழைப்புக்கள்", அழைக்கப்படுபவர்களை கௌரவப்படுத்துவதற்காக அல்ல,
முன்பெல்லாம் (இப்போதும்தான் ) முதற்பிரதி வாங்க காளிகோவில் ஐயர் (சிறீ பத்ர காளியம்மன் தேவஸ்தான ஆதீன கர்த்தா) அழைக்கப்படுவதைப்போன்ற அருவருப்பின் நீட்சிதான் இதுவும்.

முன்பெல்லாம் மார்க்சீயத்தின் பழமைவாதம்பற்றியும், பின்னவீனத்துவத்தின் போதாமைகள் பற்றியும், புலிகளின் பாசிசம் பற்றியும் தீவிரமாக பேசித்திரிந்த இன்றைய என் ஜீ ஓ புத்திஜீவிகள் , சமாதானப்பாடல்கள் ஒலிக்க, மும்மத குருமார்கள் (நாலுமதம்?) ஆசிவழங்க புலிப்பிரமுகர்களுக்கும் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, கருத்தரங்கு திருவிழா நடத்துகிறார்கள்.


டொமினிக்கின் இசைக்கச்சேரியிலிருந்து திருமறைக்கலாமன்ற நிகழ்வுகள் வரை எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல.

மக்களுக்கு உண்மையான சமாதானம் எதுவென போதிக்கிறோம் என்பதும், மக்களை அரசியல்மயப்படுத்துகிறோம் என்பதும், சிந்திக்கத்தெரிந்தவர்களுக்கென அவர்கள் வைத்திருக்கும் விளக்கம்.

புலிப்பிரமுகர், மக்களை கூட்டவும், புலிக்கு வால் பிடிக்கவுமான ஆயுதம்.

பாராளுமன்ற உறுப்பினர், செல்வாக்கை பெற்றுக்கொள்ளவும், பத்திரிகைகளில் இடம்பிடிக்கவும், காசுக்குமான வழி.

அடிப்படையில் கருத்தரங்குகளே,
தமது எஜமானர்களாக இருக்கும், வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தாம் எதோ செய்து கொண்டிருக்கிறோம் என நிகழ்ச்சி நிரல்க்காட்டுவதற்காகத்தான்.

புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்களாக இருக்கவேண்டும் என அடிக்கடி கூறிக்கொள்ளும் பலர் தமது "செயற்பாடுகளாக" இவற்றை சொல்லிக்கொள்ளக்கூடியதாக இருப்பது மேலதிக வசதி.

சுனாமி நேரத்தில் இன்னுமொரு நண்பரோடு சுவாரசியமான உரையாடல் நடந்தது.
(ஆ..! மறந்துபோய்விட்டேன் பணமீட்டித்தரும் மற்றொரு சொல்- சுனாமி)

அவர் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் கிணறுகளை துப்புரவாக்கப்போவதாக சொன்னார்.
அட நல்ல பணியாயிற்றெ என்று, நான் சில ஊடகங்களின் கண்களுக்குப்படாத கிராமங்களின் பெயர்களை சொன்னேன்.
முடிந்தால் நல்ல மலசல கூடங்களை கட்டிக்கொடுக்கும் படியும் ஆலோசனை சொன்னேன்.

உடனே அவர், இல்லை இல்லை மட்டிக்கழிப்பகுதியில் தான் அதை செய்யவேண்டும் என்றார்.

அந்தப்பகுதிக்கு பெரிதாக தேவையில்லை.
எல்லோரும்தானே அங்கே செயற்திட்டங்களை செய்கிறார்கள், நீங்கள் பிரயோசனமாக ஏதாவது செய்யலாமே என்று சொன்னபோது,

அப்படியல்ல, கிணறு சுத்திகரிப்பதைத்தான் செய்யவேண்டும்.
ஏனெனில், அதுதான் சுனாமி பதிப்பிலிருந்து மீட்சியளிப்பதாய் இருக்கும்.
அதற்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடம் வேண்டும்/. தூர இடங்கள் என்றால் போய் வர கஷ்டம்.
சுனாமி ரிலீஃப் என்றால் தானே நிறைய காசு தருவார்கள் என்றார் சர்வசாதாரணமாக.


இதனால் வடக்குக்கிழக்கு வாழ் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது யாதெனில்,
மேற்கண்ட நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவந்தால் வாய்விட்டு சிரித்து, மறுத்துவிடுங்கள்.
அவற்றால் உங்கள் நேரம் வீண்.
வீட்டில் கம்பிவழி தொலைக்காட்சியில் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு, Nat Geo அல்லது டிஸ்கவரி சனல் பாருங்கள். ( குடும்பத்தாருக்கு தேனீர் போட்டுக்கொடுக்க மறக்கவேண்டாம்|).

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லி சில கிலோபைட்டுக்களை வீணாக்க விருப்பமில்லை. ( (நடுக்கடலுக்குப்போன நாய்கள் தானே)

விடுதலைப்புலிபிரமுகர்களுக்கு,

உங்கள் இயக்கம் ( எனும்போதே "எங்கள் இயக்கம் எனும் மனத்து ஓசை ஒலித்து ஓய்கிறது) தற்போது மிக அவசியமான பாத்திரத்தை எமது விடுதலைப்போராட்டத்தில் ஆற்றிவருகிறது.
இவ்வாறு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பணம் பெருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, இயக்கத்தின் மதிப்பைத்தான் குறைக்கும்.

சந்தோஷமாய் திருக்கோணமலைக்குப்போய் கலந்துகொள்வதற்கு உருப்படியாக ஏதேனும் நிகழ்ச்சிகள் நடக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

இத்தகைய நவீன சடங்குகள் எதுவுமே அற்றதாய்.

நன்றி - மயூரன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
ஈழத்து அறிவுஜீவிகள், நவீன சடங்குகள் - by Mathan - 05-11-2005, 02:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)