05-10-2005, 05:17 PM
இந்தியா செல்லும் சொல்ஹெய்ம் இந்திய அரசின் அண்மைக்கால முரண்பட்ட கருத்துக்கள் குறித்து பிரஸ்தாபிப்பார்!
ஆழிப்பேரலை நிவாரண பொதுக்கட்டமைப்பொன்றை விடுதலைப்புலிகளுடன் இணைந்து சிறீலங்கா அரசு ஏற்படுத்தக்கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு அண்மைக்காலத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை விட தனது பிராந்திய அரசியல் ஆதாயங்களுக்கே முன்னுரிமை கொடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.
இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சிகளையும் எடுப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டுவரும் அடிப்படைவாத இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்னர் கருத்துக்கூறிய இந்திய வெளிவிவகார செயலாளர் சியாம் சரண் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களது ஆகாய மற்றும் கடற் பலம் அதிகரித்து வருவதை இந்தியாவுக்கான ஒரு அச்சுறுத்தலாகவும் பார்ப்பதாகவும் கருத்துக் கூறியிருந்தார்.
அத்துடன் பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைப் பலிகொண்ட ஆழிப்பேரலையின் பாதிப்பினால் அழிந்துபோயுள்ள தமிழர் தாயகப்பகுதிகளில் அத்தியாவசிய நிவாரணப் பணிகளை முன்னெடுக்க விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகள் பரிந்துரைத்துள்ள திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கவும் சியாம் சரண் தவறவில்லை.
சிறீலங்கா அரசின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. ஆறுமுகம் தொண்டமான் முஸ்லிம் கட்சிகள் உட்பட சிஹல உறுமய போன்ற கட்சி உறுப்பினர்களையும் சந்தித்த பின்னர் சியாம் சரண் இவ்வாறு கூறியுள்ளமை இந்தியாவின் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
விரைவில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் கருத்துக் கூறுகையில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ளதாக நம்பப்படும் விமானத்தளத்தையும் அவர்களிடம் இருப்பதாகக் கருதப்படும் இரு விமானங்கள் குறித்தும் தனது கண்டனத்தை வெளியிட்டார். இந்த விடயங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறீலங்காவிற்கு வருகை தரவுள்ள சமாதான சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இந்தியாவிற்கு விசேட பயணமொன்றை மேற்கொண்டு அங்கு பல முக்கிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளார்.
ஆசிய பிராந்தியத்தியத்தில் தனது சொந்த நலன்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் இந்தியா ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர்களது நிரந்தர சமாதானத்திற்கான முயற்சிகளில் சிறீலங்கா அரசின் அசமந்தப் போக்கை எதுவிதத்திலும் கண்டுகொள்ளாது இருப்பதுடன் சிறீலங்கா அரசின் ஏமாற்று நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருவது தமிழீழ விடுதலை ஆர்வலர்களையும் சமாதான விரும்பிகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது.
இந்தியா செல்லவுள்ள எரிக் சொல்ஹெய்ம் தனது முன்னைய பயணங்களின்போது ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று சர்வதேச அனுசரணையாளர்களுக்கு இந்தியா வழங்கிய உறுதிமொழியை மதிக்காது அண்மைக் காலத்தில் இந்தியா திடீரென முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரணையும் எரிக் சொல்ஹெய்ம் இந்தியாவில் சந்திக்கவுள்ளார் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவுச் செயலாளர் தனது இலங்கை விஜயத்தின்போது திருகோணமலைக்கும் கண்டிக்கும் விஜயம் செய்திருந்தார்.
சொல்ஹெய்முக்கும் சியாம் சரணுக்கும் இடையிலான சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் பற்றிய இந்திய நிலைப்பாடு மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பிரதேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் ஒன்றிணைந்து பணியாற்றக் கூடியவகையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் பொதுக்கட்டமைப்பு குறித்தும் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமாதான நடவடிக்கைகள் குறித்து நோர்வே தரப்பு இந்தியாவிற்கு அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறுகிறதா என ஊடகம் ஒன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அதிகாரி ஒருவர் நோர்வே தரப்பு தங்களுக்கு 95 வீத விடயங்களையே கூறுவதாகவும் 5 வீத விடயங்களை மறைப்பதாக தாங்கள் எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த 5 வீத விடயங்களையும் அறிந்து கொள்ளும் வழி தங்களுக்குத் தெரியும் என்றும் தாங்கள் அந்த 5 வீத விடயங்களையும் அறிந்து கொள்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா ஜனாதிபதி உத்தேச பொதுக்கட்டமைப்பு விவகாரம் தொடர்பாக உரையாடுவதற்காக சனிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிலையிலேயே சொல்ஹெயிமின் விஜயம் புதன்கிழமை இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்.