Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமனிதர் சிவராம் அவர்களின் சில கட்டுரைகள்!
#15
<b>சிவராமைக் கருணாவே நேரடியாகக் கொன்றார்?</b>

ஊடகவியலாளர் சிவராமை கருணாவே தனது கைகளால் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற தகவலை ஊடக வியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் வெளியிட்டிருக்கின்றார்."கருணாவே நேரடியாக தராக்கி சிவராமைக் கொன்றாரா?' - என்ற தலைப்பில் "த சண்டே லீடர்' பத்திரிகையில் தாம் வரைந்த கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.சிவராமைக் கடத்தியவர்கள் அவரை சித்திரவதை செய்தார்கள் என்பதற்கோ விசாரணைக்கு உட்படுத்தினார்கள் என்பதற்கோ தடயம் ஏதுமில்லை. கடத்தப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் அவர் கொல்லப்பட்டுவிட்டார்.சிவராமைக் கடத்தியவர்களின் எண்ணம் அவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் வெறுமனே கொல்வது மட்டுமாயின் அவரைத் தாங்கள் கடத்திய இடத்திலேயே சாவகாசமாகச் சுட்டுவிட்டுச்சென்றிருக்கலாம் அவரைக் கடத்தி இவ்வளவு தூரம் கொண்டுவந்து சுட்டுப் போடத்தேவையில்லை.

எங்கோ ஒருவர் முன் அவரைக் கொண்டு செல்வதற்காகத்தான் அவர் கடத்தப்பட்டார். சிவராமை மடக்கிய இடத்துக்கு - அந்த நடவடிக் கைக்கு - நேரடியாக வரமுடியாத இக்கட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் இந்த சூத்திரதாரி நபர் இருந்ததால்தான் அவரது இடத்துக்கு சிவராமைக் கடத்திக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.அந்த சூத்திரதாரி நபர் வேறு யாருமல்லர் கருணாவாகவே இருக்கலாம். தம்மோடு சேர்ந்து செயற்பட்டு விட்டுத் தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் சிவராம் என்று ஆத்திரம் கொண்டிருந்தார் கருணா. புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்த போது அதுவரை அவருடன் சேர்ந்து இயங்கி வந்த சிவராம் அதன் பின் கருணாவை மோசமாக விமர்சித்து வந்தார்.சிவராம் மீது அதிககோபம் கொண்டிருந்த கருணா சிவராம் தனது கையால் கொல்லப்பட வேண்டும் என்பதால் அதுவரை சிவராமுக்கு ஊறு ஏதும் விளைவிக்கவேண்டாம் எனத் தமது ஆள்களுக்குக் கூறியிருந்தார் என கிழக்குத் தகவல்கள் கூறுகின்றன.சிவராமை கொழும்பில் வைத்துக்கொல்வதாயின் கருணா அதை எப்போதே செய்திருக்கலாம். கொழும்பில் பாதுகாப்பு ஏதுமின்றி பஸ்ஸில் திரியும் சிவராமைக் கொல்வது கருணாவுக்கு அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. ஆனால் அதற்குக் கருணாவுக்கு அனுமதி முன்னர் வழங்கப்பட்டிருக்கவில்லை.குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல்போய், அவரைக்கடத்தியவர்கள் புலிகளே என்று சந்தேகம் எழுந்த பின்னணியிலேயே கருணாவுக்கு சிவராமைக் கொல்லும் வேலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாட்டு வசதிகளை புலனாய்வுப் பிரிவு வழங்கி உதவியது. டி.பி.எஸ்.ஜெயராஜின் கட்டுரையில் இந்தக் சாரப்படக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

uthayan.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 05-03-2005, 05:13 PM
[No subject] - by KULAKADDAN - 05-03-2005, 07:49 PM
[No subject] - by hari - 05-04-2005, 05:29 AM
[No subject] - by eelapirean - 05-04-2005, 06:47 AM
[No subject] - by hari - 05-04-2005, 07:57 AM
[No subject] - by Danklas - 05-04-2005, 01:49 PM
[No subject] - by hari - 05-04-2005, 01:52 PM
[No subject] - by Danklas - 05-04-2005, 02:04 PM
[No subject] - by tamilini - 05-04-2005, 02:09 PM
[No subject] - by Danklas - 05-04-2005, 02:23 PM
[No subject] - by vasisutha - 05-04-2005, 02:30 PM
[No subject] - by eelapirean - 05-04-2005, 03:33 PM
[No subject] - by eelapirean - 05-04-2005, 03:46 PM
[No subject] - by Danklas - 05-09-2005, 11:24 AM
[No subject] - by Aravinthan - 04-25-2006, 05:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)