Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புயலுக்கும் பெயர்
#3
[size=14]அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி: லட்சக்கணக்கானோர் தவிப்பு

நார்த் கரோலினா:

அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சூறாவளிப் புயல் காற்று தாக்கியதில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் வீடுகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன.


சுமார் 160 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த புயல் காற்றினால் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த புயல் குறித்து நிமிடந்தோறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பயங்கர காற்றுடன் கடும் மழையும் பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள் நிறைந்த இந்த மாகாணத்தில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இந்த புயலை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் நார்த் கரோலினா மாகாணத்தில் பல்வேறு நகர்களுக்கும் தங்களது விமான சேவையை நிறுத்துவிட்டன. மேலும் ரயில் போக்குவரத்தும் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நார்த் கரோலினா தவிர விர்ஜீனியா, மேரிலேண்ட், கொலம்பியா, நியூஜெர்ஸி ஆகிய இடங்களிலும் இந்தப் புயலின் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

http://www.thatstamil.com/news/2003/09/19/us.html
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 09-19-2003, 11:07 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 11:11 PM
[No subject] - by nalayiny - 09-20-2003, 08:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)