05-08-2005, 02:37 AM
பிரபஞ்சத்தின் தோற்றத்தின்போதே விஞ்ஞானத்தின் தோற்றமும் ஆரம்பமாகிவிட்டது.. மனிதனானவன் தனது பகுத்தறிவினாலும் நுண்ணறிவினாலும் தனது வசதிகளுக்கேற்ப விஞ்ஞானத்தின் மூலம் விளைச்சலைத் தருகிறான்.
அதுமட்டுமா? மனிதனே விஞ்ஞானமென்று சொல்கிறதாம் உயிரியல் விஞ்ஞானம்.. என்றெல்லாம் தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைக்கிறார் குருவிகள். (குருவிகள் அவர்கள் என்று கூறமுடியாததால் குருவிகள் என்றே கூறுகிறேன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
விஞ்ஞானமானது நன்மைகளுடன் சில பாதகங்களைக் கூறினாலும், அவற்றுக்கும் விடையைச் சொல்லுகிறது.. ஆனால் நீங்கள்தான் தேடிக் கண்டறிந்து பலனடையாமல் சோம்பேறிகளாக இருந்துகொண்டு, விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது என, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள் என்பதுபோல, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியைக் கேட்கிறார்.
அதுமட்டுமா?
மனிதன் ஏதோ வகையில் இயங்கிக்கொண்டு இருக்கிறான்.. அதுதான் அடிப்படை என்கிறார்.
அதுதானே.. ஆகக் குறைந்தது அவனது இதயமாவது இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது? அதற்கு சோம்பல் வந்தால் மனிதனின் கதி என்னாவது?!
அப்படியானால் சோம்பல் என்றால் என்ன? சோம்பல் மனிதனின் உறுப்புகளில் இல்லை.. அவனது மனதில் இருக்கிறது.. அவனது சிந்தனையில் இருக்கிறது.. ஆக, இவர்கள் சோம்பல் என்ற வியாதிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.. இதை இப்படியே விட்டுவிட முடியாது.. எதிர்கால சந்ததியையும் பாதித்துவிடும்.. அதனால் நவீன விஞ்ஞானத்தின்மூலம் இவர்களின் வியாதிக்கும் தீர்வு காண தற்போதே விளைவோம் என அழைப்பும்விடுக்கிறார்..
பார்த்தீர்களா குருவிகளுக்கு எவ்வளவு நல்ல மனது? எவ்வளவு பரந்த சிந்தனை? எதிர் அணியிலுள்ளவர்களை காப்பாற்றும் விசாலமான பார்வை!! இதைத்தான் மனிதாபிமானம் என்பார்களோ.. குருவிகளபிமானம்?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆக, மொத்தத்தில் விஞ்ஞானமானது மனிதனை சோம்பேறியாக்கவில்லை என அருமையாக எடுத்துக் கூறியதோடு.. சோம்பல் என்பது வியாதி எனவும் கூறியுள்ளார்.. ஆனால் என்ன? எதிரணியினரின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில் காட்டிய அக்கறையை.. விஞ்ஞானமானது எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதிலும் கொஞ்சம் காட்டியிருந்தால்... மேலும் சில புதிய கருத்துக்கள் பிறந்திருக்கும்.. பரவாயில்லை.. இன்னும் கருத்துக்களை முன்வைக்க உறவுகள் இருக்கிறார்கள். ஆக, அதுவரை காத்திருப்போம்.
'விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, நிலவன், இளைஞன், மதன் ஆகியோரில் ஒருவர் அடுத்ததாக தனது கருத்துகளை வைப்பார் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
அதுமட்டுமா? மனிதனே விஞ்ஞானமென்று சொல்கிறதாம் உயிரியல் விஞ்ஞானம்.. என்றெல்லாம் தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைக்கிறார் குருவிகள். (குருவிகள் அவர்கள் என்று கூறமுடியாததால் குருவிகள் என்றே கூறுகிறேன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )விஞ்ஞானமானது நன்மைகளுடன் சில பாதகங்களைக் கூறினாலும், அவற்றுக்கும் விடையைச் சொல்லுகிறது.. ஆனால் நீங்கள்தான் தேடிக் கண்டறிந்து பலனடையாமல் சோம்பேறிகளாக இருந்துகொண்டு, விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது என, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள் என்பதுபோல, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியைக் கேட்கிறார்.
அதுமட்டுமா?
மனிதன் ஏதோ வகையில் இயங்கிக்கொண்டு இருக்கிறான்.. அதுதான் அடிப்படை என்கிறார்.
அதுதானே.. ஆகக் குறைந்தது அவனது இதயமாவது இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது? அதற்கு சோம்பல் வந்தால் மனிதனின் கதி என்னாவது?!
அப்படியானால் சோம்பல் என்றால் என்ன? சோம்பல் மனிதனின் உறுப்புகளில் இல்லை.. அவனது மனதில் இருக்கிறது.. அவனது சிந்தனையில் இருக்கிறது.. ஆக, இவர்கள் சோம்பல் என்ற வியாதிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.. இதை இப்படியே விட்டுவிட முடியாது.. எதிர்கால சந்ததியையும் பாதித்துவிடும்.. அதனால் நவீன விஞ்ஞானத்தின்மூலம் இவர்களின் வியாதிக்கும் தீர்வு காண தற்போதே விளைவோம் என அழைப்பும்விடுக்கிறார்..
பார்த்தீர்களா குருவிகளுக்கு எவ்வளவு நல்ல மனது? எவ்வளவு பரந்த சிந்தனை? எதிர் அணியிலுள்ளவர்களை காப்பாற்றும் விசாலமான பார்வை!! இதைத்தான் மனிதாபிமானம் என்பார்களோ.. குருவிகளபிமானம்?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆக, மொத்தத்தில் விஞ்ஞானமானது மனிதனை சோம்பேறியாக்கவில்லை என அருமையாக எடுத்துக் கூறியதோடு.. சோம்பல் என்பது வியாதி எனவும் கூறியுள்ளார்.. ஆனால் என்ன? எதிரணியினரின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதில் காட்டிய அக்கறையை.. விஞ்ஞானமானது எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதிலும் கொஞ்சம் காட்டியிருந்தால்... மேலும் சில புதிய கருத்துக்கள் பிறந்திருக்கும்.. பரவாயில்லை.. இன்னும் கருத்துக்களை முன்வைக்க உறவுகள் இருக்கிறார்கள். ஆக, அதுவரை காத்திருப்போம்.
'விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, நிலவன், இளைஞன், மதன் ஆகியோரில் ஒருவர் அடுத்ததாக தனது கருத்துகளை வைப்பார் என எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
.