05-07-2005, 12:16 PM
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>
தனிமையின் தாக்கம்
ஈரக்குகைக்குள்
நினைவுகள் அடைக்க
காலத்தை நோகும் நங்கையே
மாற்றங்கள் உன்னைத் தேற்ற
தேற்றங்கள் உன்னை மாற்ற
தேடி வரும் உறவுகள்
ஒதுக்கி ஒழிந்து கொள்ளாதே...!
தோற்றங்கள் மாற்றி
தேடியும் வரும் உறவுகள்
தேர்ந்து தெளிந்து கொள்
தேவையற்றதுகள் அகற்றி
தேவைகள் ஆற்றிக் கொள்...!
வாழ்க்கை என்பது
உன் கையில்
வாழத்துடிக்கும் குழந்தையாய்
தவழ்வது அறியாயோ
தாயே நீ
அதை அநாதையாய்
விடுவது ஆகுமோ...??!
போராடும் சக்தி
உனக்குள் என்றும்
உறுதியாய் இருக்கும்
உன் பார்வை சொல்லுது...!
ஏக்கங்கள் தவிர்த்து
தாக்கங்கள் களைந்து
உயரங்கள் ஏக
உரமாய் இன்னும் உறுதி கொள்...!
அப்போ...
சுமக்கும்
கனமும் பஞ்சாகும்
இதயமும் நாளமும்
இனிய வீணையாகும்
கூட வரும் உறவும்
வலிமையாகும்
உன் வாழ்வும்
உலகுக்கு ஓர்
உதாரணமாகும்
மெல்லியவள் மென்மைக்குள்
உள்ள வன்மையாம் உறுதியின்
கோலத்துக்கு....!
கண்ணே
வீணே உன் உணர்வுகாய்
கண்ணீரைக் காணிக்கையாக்கி
காலத்தை வீணடிக்காதே
உணர்ந்து வாழ்வுக்கும்
ஓர் வழி சமை
உறுதியின் உறைவிடமாய்...!
நாளை நீயே
வீணை உன் பெறுமதி
உணர்ந்தே தெளிந்து கொள்வாய்
அப்போ ஓர் உயிர்
உனக்குள் என்றும்
உனக்காய் இருக்கும்...!
மாறாய்...
ஏக்கங்கள் கொண்டு
கோழையாய் நீயே உன்னை
தொலைக்க முனையாதே
கண்ணீரோடு எங்கும்
அவலமே காட்சியாகும்
உன்னோடு உறவாடும்
உயிரும் கூட வாடி
அழியும் நிலையாகும்...!
தனிமையின் தாக்கம்
ஈரக்குகைக்குள்
நினைவுகள் அடைக்க
காலத்தை நோகும் நங்கையே
மாற்றங்கள் உன்னைத் தேற்ற
தேற்றங்கள் உன்னை மாற்ற
தேடி வரும் உறவுகள்
ஒதுக்கி ஒழிந்து கொள்ளாதே...!
தோற்றங்கள் மாற்றி
தேடியும் வரும் உறவுகள்
தேர்ந்து தெளிந்து கொள்
தேவையற்றதுகள் அகற்றி
தேவைகள் ஆற்றிக் கொள்...!
வாழ்க்கை என்பது
உன் கையில்
வாழத்துடிக்கும் குழந்தையாய்
தவழ்வது அறியாயோ
தாயே நீ
அதை அநாதையாய்
விடுவது ஆகுமோ...??!
போராடும் சக்தி
உனக்குள் என்றும்
உறுதியாய் இருக்கும்
உன் பார்வை சொல்லுது...!
ஏக்கங்கள் தவிர்த்து
தாக்கங்கள் களைந்து
உயரங்கள் ஏக
உரமாய் இன்னும் உறுதி கொள்...!
அப்போ...
சுமக்கும்
கனமும் பஞ்சாகும்
இதயமும் நாளமும்
இனிய வீணையாகும்
கூட வரும் உறவும்
வலிமையாகும்
உன் வாழ்வும்
உலகுக்கு ஓர்
உதாரணமாகும்
மெல்லியவள் மென்மைக்குள்
உள்ள வன்மையாம் உறுதியின்
கோலத்துக்கு....!
கண்ணே
வீணே உன் உணர்வுகாய்
கண்ணீரைக் காணிக்கையாக்கி
காலத்தை வீணடிக்காதே
உணர்ந்து வாழ்வுக்கும்
ஓர் வழி சமை
உறுதியின் உறைவிடமாய்...!
நாளை நீயே
வீணை உன் பெறுமதி
உணர்ந்தே தெளிந்து கொள்வாய்
அப்போ ஓர் உயிர்
உனக்குள் என்றும்
உனக்காய் இருக்கும்...!
மாறாய்...
ஏக்கங்கள் கொண்டு
கோழையாய் நீயே உன்னை
தொலைக்க முனையாதே
கண்ணீரோடு எங்கும்
அவலமே காட்சியாகும்
உன்னோடு உறவாடும்
உயிரும் கூட வாடி
அழியும் நிலையாகும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

